ஆந்திராவிலிருந்து சென்னைக்கு தொடரும் கடத்தல்... திருத்தணி அருகே காரில் செம்மரக்கட்டை கடத்திய 3 பேர் கைது

திருத்தணி அருகே ஆந்திராவில் இருந்து சொகுசு காரில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரக்கட்டை கடத்திய மூவர் கைது.

ஆந்திராவிலிருந்து சென்னைக்கு தொடரும் கடத்தல்... திருத்தணி அருகே காரில் செம்மரக்கட்டை கடத்திய 3 பேர் கைது
திருத்தணி அருகே  பூணிமாங்காடு ஊருக்கு வெளியில் இன்று காலை அந்த பகுதியில் ஆந்திராவிலிருந்து வரும் வாகனங்களை திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் அவர்களின் தனிப்படை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
 
 அப்போது அந்த வழியாக வேகமாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்ய முயற்சி செய்யும் போது அந்த காரில் இருந்த நபர் தப்பி ஓட முயற்சி செய்தனர் அவர்களை தனிப்படை போலீசார் லாவகமாக பிடித்து சொகுசு கார் மற்றும் மூவரையும் தனிப்படை போலீஸ் விசாரணை மேற்கொண்டதில் கூறிய தகவல்கள் அந்த சொகுசு காரில் 50 செம்மரக்கட்டைகள் முதல் தரம் உடையது மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
 
இதன் மதிப்பு சர்வதேச அளவில் ஒரு கோடி ரூபாய் ஆகும், இந்த செம்மரக்கட்டை கடத்தி வர பயன்படுத்தப்பட்ட சொகுசு காரை ஓட்டிவந்த சென்னை தாம்பரம் அப்பகுதியை சேர்ந்த கனிமாதுல்லா வயது(30) இவருடன் அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர் முருகன் வயது(31) அவர்களுடைய செம்மரக்கட்டை கடத்தல் கூட்டாளி ஆந்திர மாநிலம் நகரி மண்டபம் கே.வி.புரம், அப்பகுதியை சேர்ந்த சின்னப்பா-வயது(48) என்ற மூவரையும் பிடித்து கனகம்மாசத்திரம் காவல்நிலையத்தில் வைத்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இவர்கள் மூவரும் சென்னைக்கு துறைமுகப் பகுதிக்கு செம்மரக்கட்டைகளை கடத்தி செல்வதாக கூறி உள்ளனர்.   இதுகுறித்து தனிப்படை போலீசார் கனகம்மாசத்திரம் போலீசாரிடம் இவர்கள் மூவரையும் மற்றும் செம்மரக்கட்டை கடத்தல் வண்டி  ஒப்படைத்தனர்.
 
 கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்துகொண்டு, திருத்தணி வனத்துறை அதிகாரிகளிடம் இப்படிப்பட்ட சொகுசு கார், பிடிபட்ட 3 வாலிபர்கள், பிடிபட்ட செம்மரக்கட்டை, ஆகியவற்றை வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். திருத்தணி வனத்துறை அதிகாரிகள் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த மாதம் கனகம்மாசத்திரம் போலீசார் 50 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டை பிடித்தனர் தற்போது இந்த மாதமும் செம்மரக்கட்டை ஆந்திராவில் இருந்து சொகுசு காரில் கடத்தி வந்தது தனிப்படை போலீசார் பிடித்துள்ளனர்.
 
தொடர்ந்து ஆந்திர மாநிலத்திலிருந்து திருவள்ளூர் மாவட்டம் வழியாக சென்னைக்கு செம்மரக்கட்டை கடத்தி வருவது தொடர்கதையாக உள்ளது, இதற்கு திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் திருவள்ளூர் மாவட்ட எல்லைப்பகுதியில் சோதனைச் சாவடிகள் அமைத்து ஆந்திராவிலிருந்து வரும் வாகனங்களை கடுமையாக பரிசோதனை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.