மாணவியை தத்து எடுத்து வளர்த்த குடும்பமே கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்த சோகம்..! தாய், தந்தை, 3 மகன்கள் அதிரடியாக கைது!!

கல்லூரி மாணவியை தத்து எடுத்து வளர்த்து ஆளாக்கியவர்களே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாணவியை தத்து எடுத்து வளர்த்த குடும்பமே  கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்த சோகம்..! தாய், தந்தை, 3 மகன்கள் அதிரடியாக கைது!!

கல்லூரி மாணவி ஒருவர் வளர்ப்பு வீட்டினால் தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து, ராயப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வாக்குமூலம் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அவர், எனக்கு நேர்ந்த கொடுமைகளை வாழ்க்கையில் எந்த பொண்ணும் சந்திக்கக்கூடாது. நான் தற்போது சென்னையில் உள்ள பெண்கள் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறேன்.

நான் பிறந்தவுடன் எனது தாயார் இறந்து போனார். தந்தையும் அடுத்து காலமாகி விட்டார். அதற்கு பிறகு என்னை வளர்க்க முடியாத சகோதரி மற்றும் சகோதரர்கள், சென்னையை சேர்ந்த ஷெரீப் - ஜமீலா தம்பதியிடம் என்னை தத்து கொடுத்து விட்டனர். எனக்கு நினைவு தெரிந்தபோது, அவர்களைத்தான் தந்தை, தாயாக நான் பார்த்தேன். அவர்களுக்கு 3 மகன்கள் உள்ள நிலையிலும், பெண் குழந்தை இல்லாததால், அவர்களின் மகளை போலவே என்னை பாசத்தை கொட்டி வளர்த்தார்கள். என்னை பெரிய புகழ்பெற்ற கான்வென்ட் பள்ளியில்தான் படிக்க வைத்தனர். எனக்கு தற்போது 17 வயது ஆகிறது. சென்னையில் உள்ள பிரபல கல்லூரியில் தான் படித்து வருகிறேன். 

ஆனால், நான் வளர்ந்து பருவம் அடைந்த பிறகுதான் எனக்கு சோதனை காலம் தொடங்கியது என்றே சொல்லலாம். கடந்த 2020-ம் ஆண்டு என்னை மகளாக வளர்த்த ஷெரீப் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்து சீரழித்து விட்டார். மிரட்டியதால் யாரிடமும் சொல்லவில்லை. இதனிடையே அவரது மகன் இம்தியாசுக்கு, தந்தை ஷெரீப் என்னோடு உறவு வைத்திருப்பது தெரிந்து விட்டது. இதனால் அவரும் என்னை அவர் கணக்கிற்கு பந்தாடினார். அடுத்தடுத்து அவரது அடுத்த மகன்கள் இர்பான், அனீப் ஆகியோரும் என்னிடம் சுகம் அனுபவித்தனர். 3 மகன்களும் திருமணம் ஆனவர்கள். சில நேரங்களில் ஒரே நாளில் 4 பேரும் என்னை பாலியல் துன்புறுத்தல் செய்வார்கள்.

ஒரு கட்டத்தில் அவர்களின் கொடுமையை தாங்க முடியாத நான் தாய் ஜமீலாவிடம் நடந்த விசயத்தை சொல்லி கண்ணீர் விட்டு அழுதேன். ஆனால் அவர் சொன்ன பதில் என்னை கதற வைத்து விட்டது. அனைத்து விசயங்களும் எனக்கு தெரியும். அவர்களின் இஷ்டப்படி நடப்பதுதான் உனக்கு நல்லது, என்று கொஞ்சம்கூட இரக்கமே இல்லாமல் பதில் சொல்லி விட்டு சென்றார். 

இதற்கிடையே நான் கர்ப்பமானதால், உடனே தந்தை ஷெரீப், என்னை மருத்துவமனைக்கு அழைத்து சென்று கருவை கலைக்க ஏற்பாடு செய்தார். இதற்கு பிறகாவது, எனக்கு விடிவு காலம் பிறக்கும் என்று நினைத்தால், அது நடக்கவில்லை. மாறாக அவர்கள் 4 பேரும் என்னிடம் அதே உறவை தொடர்ந்தார்கள்.

அப்போதுதான் எனது சகோதரியிடம் எனக்கு ஏற்பட்ட கொடுமைகளை செல்போன் மூலம் கூறி அழுதேன். அதற்கு உடனடி உதவி கிடைத்தது.
இவ்வாறு பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி தனது வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் கூறினார்கள்.

மேலும், இந்த குற்றத்தில் ஈடுபட்ட ஷெரீப், அவரது மனைவி ஜமீலா, மகன்கள் இம்தியாஸ், இர்பான், அனீப் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது அந்த மாணவி அவரது சகோதரியின் பாதுகாப்பில் உள்ளார்.