என் உயிருக்கு பாதிப்பு ஏற்பட்டால்இவர் தான் காரணம்... தலைமைக்காவலரின் வைரல் வீடியோ...

என் உயிருக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு காரணம் பட்டாலியன்  தளவாய் என கூறிய தலைமை காவலரின் வாட்சப் வீடியோ வைரல்.

என் உயிருக்கு பாதிப்பு ஏற்பட்டால்இவர் தான் காரணம்... தலைமைக்காவலரின் வைரல் வீடியோ...

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறில் காவலர்கள் பயிற்சிக்கூடம் மற்றும் ஆயுதப்படை ஆகியவற்றில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இங்கு தமிழ்நாடு சிறப்பு காவல் படை 9வது அணி மற்றும் 12 வது அணி என இரு பிரிவுகள் உள்ளன இங்கு ஒவ்வொரு பிரிவுக்கும் தளவாய் என்ற பெயர் கொண்டு ஒரு அதிகாரி இருப்பார்.

இதில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை 12வது அணியில் சி பிரிவில் தலைமை காவலராக பணிபுரிவர் ஜஸ்டின். இவர் ஒரு வாட்சப் வீடியோ ஒன்று பதிவிட்டுள்ளார் அதில்தளவாய் கார்த்திகேயன் மற்றும் உதவி ஆய்வாளர் பரமசிவன் ஆகிய இருவரும் சேர்ந்து பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள். 

இவர்களுக்கு பணம் வேண்டுமென்றால் காவலர்களை எந்த அளவிற்கு துன்ப படுத்த முடியுமா அந்த அளவிற்கு துன்பப்படுத்தி அவர்களிடமிருந்து பணம் பெறுவதும், விடுமுறை வேண்டுமெனில்  ஒரு நாளைக்கு இவ்வளவு என்று குறிப்பிட்ட ரூபாயைப் பெற்றுக்கொண்டு அவர்களை விடுமுறையில் அனுப்புவதாகவும் ஆனால் ரிஜிஸ்டரில் அவர்கள் வேலையில் இருப்பதாகவும் கணக்கு காட்டப்படுகிறது என்ற குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

மேலும் இவருக்கு உடல் ரீதியான பல்வேறு உபாதைகள் இருப்பதாவும் தெரிவிக்கிறார். இதனிடையே இவர் அதிகாரி மேல் வைத்த குற்றச்சாட்டால் அவர் மேல்  கோபம் கொண்டு இருஅதிகாரிகளும் இணைந்து அவரை நீண்ட துர பணிமாற்றத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

இதனால் மன அழுத்தம் தனக்கு ஏற்பட்டிருப்பதாகவும் என் உடல் நிலையை கருத்தில் கொள்ளாமல் என்னை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படும் இந்த அதிகாரிகளால் என் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு இவர்களே காரணம் என்று வாட்ஸ்அப் வீடியோவில் பதிவிட்டுள்ளார். இது தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் இது பற்றி அங்கு பணி புரியும்  பெயர் சொல்ல விரும்பாத பிற காவலர்கள் கூறுகையில், இங்கு விடுமுறை எடுப்பதற்கும் லஞ்சம், கேண்டில் பொருட்கள் வாங்குவதற்கும் லஞ்சம், காவலர் சீருடைகள் வாங்குவதற்கும் லஞ்சம் மற்றும் கடினமான வேலை செய்யாமல் இருப்பதற்கும் இந்த அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக குற்றச்சாட்டை எழுப்பியுள்ளனர். இதுபற்றி உயர் அதிகாரிகள் விசாரணை செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.