காவல் நிலையம் பின்புறம் உள்ள மூன்று வீடுகளில் மர்ம நபர்கள் கைவரிசை..!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் காவல் நிலையம் பின்புறம் உள்ள மூன்று வீடுகளில் மர்ம நபர்கள் கைவரிசை..!
காவல் நிலையம் பின்புறம் உள்ள  மூன்று வீடுகளில் மர்ம நபர்கள் கைவரிசை..!
Published on
Updated on
2 min read

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம் பின்புறம் உள்ள லெட்சுமி மில் மேலக்  காலனியில் வசித்து வருபவர் ராமசுப்பு என்பவரது மகன் சந்திரசேகர்(61). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மகள் கோவையில் படித்து வருகிறார். தனது குடும்பத்துடன் கோவையில் படிக்கும் மகளை பார்க்க சென்று விட்டு நேற்று நள்ளிரவு வீட்டிற்கு வந்த போது வீட்டின் பின் பக்க கதவு, பீரோ மற்றும் அலமாரி உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் இருந்த ரூ 10 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் விலை உயர்ந்த 3 கைக்கடிகாரங்கள் திருடு போனது தெரிய வந்தது. மேலும், வெள்ளி குத்துவிளக்கு, வெள்ளி குங்கும சிமிழ் போன்ற சில வெள்ளி பொருட்களை எடுத்து, அங்கிருந்த வாழை மரத்திற்கு அடியில் மறைத்து வைத்துள்ளனர். ஆனால் அதை எடுத்து செல்லவில்லை.

அதே போன்று மற்றொரு வீட்டிலும் பூட்டு உடைக்கப்பட்டு இருக்கிறது. அந்த வீட்டில் இருந்தவர்கள் வெளியூர் சென்றுள்ளதால் டிஜிருடு போன பொருட்கள் பற்றிய விவரங்கள் தெரியவில்லை. அவர்கள் வீடு திரும்பிய பின்னர் தான் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இனாம் மணியாச்சி மேம்பால சர்வீஸ் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தின் பின்பகுதியில் வசிக்கும் ராமசாமி என்பவரது மகன் விஜயக்குமார் (46). இவரும் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த நிலையில் நேற்று நள்ளிரவு வீட்டிற்கு வந்துள்ளார். இவருடைய வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 54  ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி சென்றுள்ளனர். இந்த திருட்டு சம்பவங்கள் குறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் நிலையம் பின்புறம் உள்ள வீடுகளில் நடைபெற்ற திருட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பூட்டிய வீடுகளை குறிவைத்து திருட்டு அரங்கேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com