வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் திருட்டு :  கட்டிப்போட்டுவிட்டு பணம், செல்போன் பறிப்பு !!

சூலூரில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியைக் கை,கால்களைக் கட்டிப் போட்டுவிட்டு பணம் மற்றும் செல்போன் திருடிச் சென்ற சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படு ஏற்படுத்தியுள்ளது.

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் திருட்டு :  கட்டிப்போட்டுவிட்டு பணம், செல்போன் பறிப்பு !!

சூலூர் அப்பநாய்க்கன்பட்டி வசந்தம் நகர்பகுதியைச் சேர்ந்தவர் நிர்மலா. கடந்த 5 மாதங்களுக்கு முன் கணவர் இறந்த நிலையில் தனது தாய் ராதா மற்றும் ஒரு மகளுடன் தனியாக வசித்து வருகிறார். நிர்மலா கோவை கணபதி பகுதியில் வீட்டு வேலை செய்து தனது தாயையும் மகளையும் காப்பாற்றி வருகிறார். மகள் பள்ளியில் படிக்கும் நிலையில் தாய் ராதா(72) மட்டிம் நேற்று வீட்டில் தனியாக இருந்து உள்ளார்.

பள்ளி சென்ற பேத்தி நேற்று மாலை 4 மணிக்கு வீடு திரும்பி உள்ளார். அப்போது வீட்டில் பாட்டியைக் காணாத நிலையில் வீட்டின் ஒரு அறையில் இருந்து பாட்டியின் முனகல் சத்தம் கேட்டுள்ளது. அருகிலிருந்தவர்கள் உதவியுடன் அந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அங்கு பாட்டி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் வாயில் துணி வைத்து அடைக்கப்பட்டு கிடந்துள்ளார்.

உடனடியாக அவரை அருகிலிருந்தவர்கள் உதவியுடன் மீட்டு நீலாம்பூரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சையில் சேர்த்தனர். பாட்டியின் நிலை மோசமடையவே உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சூலூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் வீட்டிலிருந்த 35 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் செல்போன் ஒன்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. பட்டப்பகலில் வீடு புகுந்து மூதாட்டியைக் கட்டிப் போட்டுவிட்டு பணம் மற்றும் செல்போனைத் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.