உள்ளாடைக்குள் மறைத்து தங்கம் கடத்திய இளைஞர்...!

உள்ளாடைக்குள் மறைத்து தங்கம் கடத்திய இளைஞர்...!
Published on: 
Updated on: 
1 min read

சென்னை விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை முதன்மை கமிஷனர் மேத்யூ ஜோல்லிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் விமான பயணிகளை கண்காணித்தனர். 

அப்போது துபாயில் இருந்து வரும் விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்த போது உள்ளாடைக்குள்  தங்கத்தை மறைத்து வைத்து இருந்ததை கண்டு பிடித்தனர். ரூ. 51 லட்சத்து 42 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 150 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இளைஞரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com