காதலை ஏற்க மறுத்த மாணவி..! ஆத்திரத்தில் கல்லால் அடித்த வாலிபர்..! அடுத்து நடந்தது என்ன?

தன் காதலை ஏற்க மறுத்த மாணவியை கல்லால் அடித்த வாலிபரை போலீசார் கைது செய்த சம்பவம் சிதம்பரத்தில் அரங்கேறியுள்ளது.

காதலை ஏற்க மறுத்த மாணவி..! ஆத்திரத்தில் கல்லால் அடித்த வாலிபர்..! அடுத்து நடந்தது என்ன?

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த அய்யனூர் பகுதியை சேர்ந்த நடனசிகாமணி என்பரின் மகன் தான் அழகர். அதேபோல் சிறகிழந்த நல்லூரை சேர்ந்த மாணவி ஒருவர்  சிதம்பரம் - சீர்காழி சாலையில் உள்ள ஐ.டி.ஐ.யில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் அழகருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் முதலில் நட்பாக பழகி வந்த நிலையில், அழகர் அந்த மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் அவள் இல்லாமல் தன்னால் வாழ முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்ட அழகர், இன்று தனது காதலை மாணவியிடம் வெளிப்படுத்தி உள்ளார். ஆனால் மாணவி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அழகர், அந்த மாணவியை வாய்க்கு வந்தவாறு திட்டிவிட்டு கல்லால் தாக்கியுள்ளார். பின்னர் இது குறித்து மாணவி அளித்த புகாரின் பேரில்   வழக்குப்பதிவு செய்த போலீசார், மாணவியை கல்லால் அடித்துவிட்டு தப்பியோடிய அழகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.