மேம்பாலத்திலிருந்து கீழே குதித்த இளைஞர்: வியாபாரம் செய்து கொண்டிருந்த பெண் மீது விழுந்து பலியான சோகம்!!

விழுப்புரம் மாவட்டத்தில் மேம்பாலத்திலிருந்து கீழே குதித்த இளைஞர் அங்கு வியாபாரம் செய்து கொண்டிருந்த பெண் மீது விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேம்பாலத்திலிருந்து கீழே குதித்த இளைஞர்: வியாபாரம் செய்து கொண்டிருந்த பெண் மீது விழுந்து பலியான சோகம்!!

திண்டிவனம்  சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பிரம்மாண்டமான மேம்பாலம் ஒன்று அமைந்துள்ளது.  மேம்பாலத்தின் கீழ் உள்ள  பகுதியில் அரசு பேருந்துகள் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்வது வழக்கம். இதனால் இந்த பகுதி எப்பொழுதும் பொது மக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதியாக காணப்படுகின்றது. இந்நிலையில்  இன்று மேம்பாலத்தின் மேல் பகுதியிலிருந்து வாலிபர் ஒருவர் திடீரென்று கீழே குதித்துள்ளார் .

இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் அந்த வாலிபர் அந்தப் பகுதியில் வெள்ளரி வியாபாரம் செய்து கொண்டிருந்த மொளசூர் கிராமத்தை சேர்ந்த அன்பழகன் என்பவரது மனைவி விமலா என்பவரது மேல் விழுந்ததால் விமலா படுகாயமடைந்து சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 

இதனையடுத்து மேலே இருந்து கீழே குதித்து இறந்த வாலிபர் யார் என்று போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மேம்பாலத்தின் மேல் பகுதியிலிருந்து வாலிபர் ஒருவர் கீழே குதித்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.