100 ரூபாய் வராத ஆத்திரத்தில் ஏடிஎம்க்கு கும்மாங்குத்து விட்ட வாலிபர்..! சுக்கு நூறாக நொறுங்கிய ஏடிஎம் இயந்திரம்..!

100 ரூபாய் வராத ஆத்திரத்தில் ஏடிஎம்க்கு கும்மாங்குத்து விட்ட வாலிபர்..! சுக்கு நூறாக நொறுங்கிய ஏடிஎம் இயந்திரம்..!
Published on
Updated on
1 min read

சாத்தான்குளம் அருகே பணம் வராத ஆத்திரத்தில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பேய்குளம் பகுதியில் கனரா வங்கி மற்றும் அதனுடன் இணைந்த ஏடிஎம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஏடிஎம்இல் கடந்த சில மாதங்களாக 100 மற்றும் 200 ரூபாய் பணம் வரவில்லை என பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களால் குற்றம் சாட்டப்பட்டு வந்தது. மேலும் அவசர தேவைக்கு மெடிக்கல் மற்றும் மளிகை கடைக்கு பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்கள் நூறு ரூபாய் எடுக்க முடியாமல் தவித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஹென்றி என்ற வாலிபர் ஏடிஎம்முக்கு 100 ரூபாய் பணம் எடுக்க வந்ததாக கூறப்படுகிறது. அப்போது 100 ரூபாய் வராததால் அங்கு ஊழியர்களிடம் இது குறித்து கேட்க சென்றுள்ளார். 

ஆனால் வங்கி ஊழியர்கள் சரியான முறையில் பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஹென்றி மீண்டும் ஏடிஎம் எந்திரத்திற்கு வந்து 100 ரூபாய் வராத ஆத்திரத்தில் தனது முழு பலத்தையும் கூட்டி "ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா" என்ற சினிமா காட்சி போல ஒரே கையில் அடித்து உடைத்துள்ளார். 

தொடர்ந்து, இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் ஹென்றியை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com