மகளின் காதலனை வைத்து கணவனை கொன்ற மனைவி..! இருவர் கைது..!

நெய்வேலியில் மகளின் காதலனை வைத்து கணவனை கொன்ற மனைவி... ! இரண்டு பேரையும் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் கைது செய்தனர்.

மகளின் காதலனை வைத்து கணவனை கொன்ற மனைவி..! இருவர் கைது..!

கடலூர் மாவட்டம் நெய்வேலி வட்டம்- 4 சேர்ந்த நாராயணன் மகன் சண்முகம்(50). இவரது மனைவி சகிலா. இவர்களுக்கு சித்ரா, பிரியங்கா என   இரண்டு மகள்களும், பிரேம் நாராயணன் என்ற ஒரு மகனும் உள்ளனர்.

சண்முகம் நெய்வேலி என்.எல்.சி சுரங்கம் 1-ல் சொசைட்டி தொழிலாளராக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு சண்முகத்துக்கும் சகிலாவுக்கும் குடும்பத் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது சகிலா வெளியில் உள்ள காரில் படுத்துகொண்டதாகவும், இரவு வீட்டின் உள்ளே சண்முகத்தின் அலறல் சத்தம் கேட்டதாகவும் சொல்லப்படுகிறது. சகிலா கதவை தட்டிபார்த்த போது திறக்கபடாததால், அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது சண்முகம் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். பின்னர் இது குறித்து சகிலா நெய்வேலி டவுன்ஷிப் போலீசாருக்கு தகவல்   கொடுத்துள்ளார்.

இந்த புகாரின் பேரில், நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் கொலை நடந்த இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். மேலும் கடலூரில் இருந்து மோப்ப நாய் கூப்பர் வரவைக்கப்பட்டது. அது கொலை நடந்த இடத்தில் இருந்து வீட்டின் பின்பக்கம் வழியாக வெகு தூரம் ஓடி நின்றது. 

இதனை அடுத்து போலீசார் சண்முகத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் போலீசாருக்கு, சகிலா மேல் ஏற்பட்ட சந்தேகத்தால், அவரிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், " எனது கணவர் சண்முகத்துக்கும் வேறொரு பெண்ணிற்கும் தொடர்பு இருந்ததால், தனக்கும் அவருக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்தது. மேலும் எனது இரண்டாவது மகள் பிரியங்காவை, நெய்வேலி வட்டம்-9 ஐ சேர்ந்த தங்கப்பன் மகன் தமிழ்வளவன் காதலித்து வந்தார். இது எனது கணவருக்கு பிடிக்கவில்லை. இதை பயண்படுத்திக் கொண்டு, தமிழ்வளவனை தொடர்பு கொண்டேன். என் கணவர் இருக்கும்வரை, என் மகளை நீ திருமணம் செய்ய முடியாது அதனால் நீ சண்முகத்தை கொலை செய்து விடு. நான் என் மகளை உனக்கு திருமணம் செய்து வைக்கிறேன் என்று  கூறினேன்.

அதன் படி, நேற்று இரவு திட்டமிட்டபடி எனக்கும் எனது கணவருக்கும் தகராறு ஏற்பட்டது. நான் வீட்டின் வெளியே உள்ள காரில் படுத்துக்கொண்டு தமிழ்வளவனுக்கு தகவல் கொடுத்தேன். பின்னர் தமிழ்வளவன் மற்றும் அவரது நண்பர், உள்ளே சென்று, என் கணவரை கொலை செய்தனர் " என விசாரணையில் கூறியுள்ளார். மேலும் விசாரணைக்கு பின்னர் சகிலாவையும், தமிழ்வளவனையும் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.