ஆளில்லா வீடுகளில் கைவரிசை காட்டிய திருடன்...4 ஆண்டுகளுக்கு பின் கைதானது எப்படி.!!

சென்னையில் ஆளில்லா வீட்டில் கொள்ளையடிக்கும் கொள்ளையனை 4 ஆண்டுகள் கழித்து ஹேர்ஸ்டைல் மூலம் சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆளில்லா வீடுகளில் கைவரிசை காட்டிய திருடன்...4 ஆண்டுகளுக்கு பின் கைதானது எப்படி.!!

சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் கடந்த- 2018 ஆம் ஆண்டு தனது வீட்டை பூட்டிவிட்டு, கெல்லீசில் தான் நடத்தி வரும் சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளை கும்பல் வீட்டில் வைக்கப்பட்டிருந்த 20 சவரன் தங்க நகையை கொள்ளையடித்து சென்றனர்.

இதுதொடர்பாக சென்னை அயனாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். ஆனால் சம்பவம் நடைபெற்று கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாகியும் இந்த வழக்கில் துப்பு கிடைக்காதால் வழக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கார்த்திகேயன் சென்னை மாநகர காவல் ஆணையரை சந்தித்து கொள்ளையடிக்கப்பட்ட  நகைகளை மீட்டு தருமாறு மீண்டும் புகார் அளித்தன் அடிப்படையில்,  தனிப்படை அமைத்த போலீசார், கொள்ளை நடந்தபோது அந்த பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் வைத்து மீண்டும்  விசாரணையை துவங்கினர். சிசிடிவி காட்சியின் பதிவான கொள்ளையனின் ஹேர் ஸ்டைலும், மற்றொரு திருட்டு வழக்கில் கைதான ரூபன் என்பவருடைய ஹேர் ஸ்டைலும் ஒரே மாதியாக இருந்தது போலீசாருக்கு சந்தேகத்தை அதிகப்படுத்தியது.

இரண்டையும் ஓப்பிட்டு பார்க்கும்போது கார்த்திகேயன் வீட்டில் கொள்ளையடுத்து சென்றது ரூபன் தான் என்பது உறுதி செய்ய போலீசார், அவரை கைது செய்து விசாரித்தனர். அதில் முரளி என்கிற கூட்டாளியோடு சேர்ந்து ஆள் இல்லாத வீடுகளில் கொள்ளையடித்து வந்ததாக ரூபன் போலீசாரிடம் தெரிவித்தார்.

மேலும் நகைகளை, கொள்ளையடித்த பின்பு போலீசாருக்கு சந்தேகம் ஏற்படாத வகையில் உள்ளாடைக்குள்  மறைத்து அந்த பகுதியில் இருந்து சென்று விடுவதாகவும் விசாரணையில்  கூறியிருக்கிறார். அதே பாணியில் தான் அயனாவரம் கார்த்திகேயன் வீட்டில் இருந்து 20 சவரன் தங்க நகை கொள்ளை அடித்ததாக தெரிவித்துள்ளார் 

கொள்ளையடிக்கப்பட்ட நகையில் தனக்கு பங்கு கொடுக்காததால் அது தொடர்பாக தனக்கும் முரளிக்கும் முன் விரோதம் ஏற்பட்டதாக தெரிவித்த அவர், கடந்த 6 மாதமாக கொள்ளையடிக்கும் தொழிலை விட்டு விட்டு திருந்தி சென்னை மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்..

இது தொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார், கைதான ரூபனிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகையில் 32 கிராம் தங்க நகையை மீட்டு உள்ளனர். மேலும் இதில் தொடர்புடைய முரளியை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.