செல்போனில் கேம் விளையாடிய மகன்...தாய் கண்டித்ததால் விரக்தியில் விபரீத முடிவு.!!

சென்னை புழல் அருகே செல்போனில் கேம் விளையாடிய மகனை தாய் கண்டிதத்தால் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செல்போனில் கேம் விளையாடிய மகன்...தாய் கண்டித்ததால் விரக்தியில் விபரீத முடிவு.!!

சென்னை புழல் அடுத்த லட்சுமிபுரம் கங்கையம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் தனசேகர்-மீனா தம்பதி. இவரது மகன் சுரேஷ், அருகில் உள்ள அரசு பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வந்தார்.

பள்ளி முடிந்து விட்டுக்கு வந்த சுரேஷ், எப்பொழுதும் செல்போனில் கேம் விளையாடி வந்ததாக சொல்லப்படுகிறது. பள்ளி பாடங்களை சரிவர படிக்காமல் எந்நெரமும் கேம் விளையாடிக்கொண்டிருந்த மகனை, தாய் மீனா கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சுரேஷ், வீட்டின் எதிரே இருந்த பூட்டிய வீட்டின் உள்ளே மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  

மகனை காணாமல் பல இடங்களில் தேடி அலைந்த உறவினர்கள் எதிரே உள்ள வீட்டை பார்த்தபோது அதில் உள்ள ஒரு அறையில் சுரேஷ் தூக்கிட்டு கொண்டது தெரியவந்தது. இதுபற்றிய தகவல் புழல் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கபட்டதை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம்  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.