வக்கிரத்துடன் நடந்து கொண்ட கொழுந்தன்... ஒரே வெட்டாக வெட்டி கொலை செய்த அண்ணி!

திருவண்ணாமலையில் வக்கிரத்துடன் நடந்து கொண்ட கொழுந்தனை அண்ணி வெட்டிக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வக்கிரத்துடன் நடந்து கொண்ட கொழுந்தன்... ஒரே வெட்டாக வெட்டி கொலை செய்த அண்ணி!

திருவண்ணாமலையில் வக்கிரத்துடன் நடந்து கொண்ட கொழுந்தனை அண்ணி வெட்டிக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கம் அருகே தளவநாயக்கன் பேட்டையை சேர்ந்தவர் செல்வம், இவர் லாரி ஓட்டுநராக பனிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், செல்வத்தின் தம்பியான ராஜா என்பவர் அண்ணன் வீட்டிற்கு அடிக்கடி வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். இதற்கிடையே பணி நிமித்தமாக அடிக்கடி வெளியூருக்கு செல்வம் செல்லும் போதேல்லாம், அண்ணியான பராசக்தியுடம் ராஜா தவறாக நடந்துகொண்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அண்ணி பராசக்தி ராஜாவை பலமுறை கண்டித்துள்ளார். எனினும் அதனை கண்டுகொள்ளாமல் நேற்று மதுபோதையில் அண்ணன் வீட்டிற்கு வந்த ராஜா மீண்டும் அண்ணி பராசக்தியிடம் தவறாக நடந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அண்ணி ராஜாவை கொடுவாளால் வெட்டிக் கொலை செய்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தவறாக நடக்க முயன்ற கொழுந்தனாரை அவரது அண்ணி வெட்டிக் கொலை செய்த சம்பவம் செங்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.