ரவுடிகளை ஏவி அக்காவின் கணவனை கொன்ற தங்கை...! காரணம் இதுதான்!!

ரவுடிகளை ஏவி அக்காவின் கணவனை கொன்ற தங்கை...! காரணம் இதுதான்!!

புதுச்சேரி வானரபேட்டை தாமரை நகரை சேர்ந்தவர்கள் கமலஹாசன் - பிரேமா தம்பதியினர். இதில் கமல்ஹாசன்  புதுச்சேரி அரசு சார்பு நிறுவனமான பான்லே பாலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 9 ஆம் தேதி மர்ம நபர்களால் வெட்டு பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிப்பட்டார்.

இது தொடர்பாக முதலியார்பேட்டை  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் கமல்ஹாசன் மனைவியின் தங்கை சரளாவிற்கும், கமலஹாசன் பிரேமா தம்பதியினர்க்கும் இடையே பூர்விக சொத்து பிரச்சனை இருந்து வந்ததாகவும், இதில் விதவையான சரளா தனது மகன்களான மதிவாணன், நாகராஜ் மற்றும் நகராஜின் நண்பர்களான பிரபல ரவுடிகள் விக்கி, கார்த்திக், சீனு ஆகியோர் உடன் கமலஹாசனின் வீட்டிற்கு சென்று தகராறு செய்து அவரை கத்தியால் வெட்டியுள்ளது தெரியவந்தது.

இதனை அடுத்து நாகராஜ் , கார்த்தி @ எச்ச கார்த்தி, விக்கி @ பிட்ஸ் விக்கி, மதிவாணன் ,  சீனிவாசன் ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து நான்கு கத்திகளை  பறிமுதல் செய்து, கைது  செய்யப்பட்டவர்களை  நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள சரளாவை முதலியார்பேட்டை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.