சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கடைக்காரர்...! வலைவீசி தேடி வரும் போலீசார்...!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கடைக்காரர்...! வலைவீசி தேடி வரும் போலீசார்...!

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த 6ம் வகுப்பு படிக்கும் மாணவி அந்த பகுதியில் உள்ள பால் கடைக்கு வந்தப் போது பால் கடை உரிமையாளர் எழிலன் என்பவர் அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து அந்த சிறுமி தன் தாயிடம் கூறியுள்ளார். 

இந்நிலையில் சிறுமியின் தாய் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், எழிலன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தலை மறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.