போலீஸ் எஸ்.ஐயிடமே கத்தியை காட்டி நகை பறித்த கொள்ளையர்கள்.! சென்னை அருகே பரபரப்பு.! 

போலீஸ் எஸ்.ஐயிடமே கத்தியை காட்டி நகை பறித்த கொள்ளையர்கள்.! சென்னை அருகே பரபரப்பு.! 

ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளரிடம் கத்தி முனையில் வாலிபர்கள் 6 சவரன் நகையை பறித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

புழல் அடுத்த விநாயகபுரம்  சூரப்பட்டு பகுதியை சேர்ந்தவர் முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் சீனிவாசன் (61) இவர் மாதவரம் ராஜமங்கலம் , செங்குன்றம் ஆகிய காவல் நிலையங்களில் பணிபுரிந்து தற்போது ஓய்வு பெற்றார்.

இந்நிலையில் நேற்று மதியம் 12 மணியளவில் ரெட்டேரி அருகில் உள்ள  மதுபானக்கடை  அருகே  காலிமனையில் மது அருந்திக்கொண்டிருந்தபோது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த மோதிரம் மற்றும் செயினை பறிக்கும்போது அவர் எதிர்த்து நின்று போராடினார்.

பின்னர் கையில் காயம் ஏற்பட்டதால் மர்ம மனிதர்கள் சுலபமாக அவரிடமிருந்து நகையை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் சென்றனர். இதுகுறித்து சீனிவாசன் மாதவரம் காவல் நிலையத்தில் நேற்று மாலை புகார் அளித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கு சந்தேகத்திற்கிடமான நபர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

இவர்களை விசாரித்ததில் ராஜமங்கலம் கொளத்தூர் பெரம்பூர் மாதவரம் ஆகிய பகுதிகளில் நடந்த கொலை வழிப்பறி கொலை முயற்சி ஆகிய வழக்குகளில் ஈடுபட்ட முன்னாள் குற்றவாளிகள் என தெரியவந்தது. இதுகுறித்து  மாதவரம் குற்றப்பிரிவு போலீசார்  இவர்கள் நால்வரின் மீது வழக்கு பதிவு செய்து இவர்களிடம் இருந்து 6 சவரன் நகையை பறிமுதல் செய்து இரண்டு மோட்டர் சைக்கிள்கள் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்பினர்.