75 சவரன் நகை, ரூ.50 லட்சம் கொள்ளை... பலே கொள்ளையன் கைது...

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.

75 சவரன் நகை, ரூ.50 லட்சம் கொள்ளை... பலே கொள்ளையன் கைது...
ஒட்டன்சத்திரம் அருகே கருவூலக் காலணியில், உத்தரமராஜா என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து கடந்த மே 9ஆம் தேதி, 75 சவரன் நகைகள் மற்றும் 50 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டன. இச்சம்பவம் குறித்து போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். 
இந்நிலையில், நேற்றிரவு தும்மிச்சம்பட்டி அருகே முதியவர் ஒருவரிடம் மர்ம நபர் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் அப்பகுதியில் போலீசார் இரவில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.
 
விசாரணையில் கருவூலக்காலணியில் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையன் தங்கராஜ் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 40 சவரன் தங்க நகைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.