சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் போக்சோவில் கைது !

சென்னை அடுத்த புழலில் சிறுமியை பலாத்காரம் செய்த நபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் போக்சோவில் கைது !

காவாங்கரை மகாவீர் கார்டன் பகுதியைச் சேர்ந்த விஜயா என்பவர், தனது வீட்டிற்கு துணி துவைக்கும் இயந்திரத்தை பழுது நீக்கம் செய்ய வந்த சுபான்பாஷா உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு கள்ளக் காதலாக மாறியுள்ளது.

இதனிடையே சுபான்பாஷா, விஜயாவின் மகளுக்கும்  பாலியல் தொல்லை தொந்தரவு செய்துள்ளார். இந்நிலையில் சிறுமியின் வாட்ஸ் ஆப் குரூப்பில் உள்ள ஆபாச வீடியோவை அனுப்பியுள்ளார். இதனைபார்த்து அதிர்ந்து போன ஆசிரியர்கள் சைல்டு ஹெல்ப் லைனில் புகாரளித்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் சுபான்பாஷாவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.  சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை  போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.