ரேஷன் கடைக்கு சென்ற மூதாட்டி வெட்டி படுகொலை...தென்காசியில் பரபரப்பு

ரேஷன் கடைக்கு சென்ற மூதாட்டி வெட்டி படுகொலை...தென்காசியில் பரபரப்பு

தென்காசி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்குவதற்காக ரேஷன் கடைக்கு சென்ற மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கோட்டை தாலுகாவில் உள்ள கேசவபுரம் நாராயணசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் பாப்பம்மாள். இவருக்கும், இவரது சொந்தகாரரான முருகன் என்பவருக்கும் நீண்ட நாட்களாக இடப்பிரச்சினை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், நேற்று இடப்பிரச்சினை காரணமாக இவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியுள்ளது. இந்தநிலையில் பாப்பம்மாள் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்குவதற்காக அருகே உள்ள ரேஷன் கடைக்கு சென்றுள்ளார்.

அப்பொழுது அவரை பின்தொடர்ந்து சென்ற முருகன்,  கோடாரியால் வெட்டி படுகொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.