ரோட்டு ஓரத்தில் சிறுநீர் கழிக்க சென்ற மணி... திரும்பியதும் காத்திருந்த ஷாக்? என்ன நடந்தது?

சிறுநீர் கழித்து கொண்டிருந்த நபரிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்..

ரோட்டு ஓரத்தில் சிறுநீர் கழிக்க சென்ற மணி... திரும்பியதும் காத்திருந்த ஷாக்? என்ன நடந்தது?

திருச்சி, புங்கனூரை சேர்ந்த சுப்பிரமணியன் (47) என்பவர் நேற்று மாலை வேலை முடித்து விட்டு தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

சுப்பிரமணியன் திருச்சி - திண்டுக்கல் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது கோரை ஆற்று பாலத்தின் தனது இரு சக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்தி விட்டு, சிறுநீர் கழிக்க சென்றுள்ளார்.

அப்போது, திடீரென மர்ம நபர் ஒருவர் சுப்பிரமணியன் பின்புறமாக வந்து கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை அறுத்துட்டு தப்பி சென்றுள்ளார். உடனே இது தொடர்பாக சுப்பிரமணியன் போலீசில் புகார் அளித்துள்ளார். சுப்பிரமணியன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்..

விசாரணையில் ராம்ஜிநகர் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் (28) என்பவர் தான் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்ததைத் தொடர்ந்து அவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.