கணவருடன் அடிக்கடி தகராறு :  பெற்ற குழந்தைகளை கழுத்தை நெரித்து கொன்ற தாய் !!

பொன்னமராவதி அருகே குடும்ப பிரச்சனை காரணமாக தான் பெற்ற இரண்டு குழந்தைகளை தாயே  கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கணவருடன் அடிக்கடி தகராறு :  பெற்ற குழந்தைகளை கழுத்தை நெரித்து கொன்ற தாய் !!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டி ஊராட்சி கருப்பர் கோவில் பட்டியை பொன்னடைக்கன். பொன்னமராவதி அருகே கருப்புக்கொடி பட்டியை சேர்ந்தவர் சின்னப்பிள்ளை மகள் பஞ்சவர்ணம் (24). இருவருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில் இரண்டு வயதில் ஜெகதீசன் என்ற ஆண் குழந்தையும், தர்சியா என்ற எட்டுமாத பெண் குழந்தையும் உள்ளனர். பொன்னாடைக்கன் பொள்ளாச்சியில் தேங்காய் உரிக்கும் கூலிவேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இருவருக்கும் அடிக்கடி குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ள நிலையில் பொன்னாடைகன் கோவில் திருவிழாவிற்காக கருப்பர் கோவில்பட்டிக்கு வந்துள்ளார். பஞ்சவர்ணத்தின் தாயார் குடும்ப பிரச்சினையை பேசி முடிக்க நினைத்து சமரச பேச்சுவார்த்தை நடந்து நடத்திய நிலையில் பிரச்சனை பெரிதாகி உள்ளது.

இந்நிலையில் குடும்ப பிரச்சினை நினைத்து மன விரக்தி அடைந்த பஞ்சவர்ணம் தான் பெற்ற இரண்டு குழந்தைகளையும் கழுத்தை நெரித்து கொன்றதோடு இத்தகவலை தனது தாயாருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்ததோடு தானும் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறி சென்றுள்ளார். இதனால் பதறிய பஞ்சவர்ணத்தின் தாயார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உள்ளார். அக்கம்பக்கத்தினர் சென்று பார்க்கையில் அங்கு அவரது குழந்தைகள் இருவரும் சடலமாக கிடந்தனர். 

இதனையடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொன்னமராவதி காவல்துறையினர் பிரேதங்களை கைப்பற்றி பொன்னமராவதி அரசுபாப்பாயி ஆச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குடும்ப பிரச்சனை காரணமாக பெற்ற தாயே குழந்தைகளை கொன்றது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.