மருமகளின் ”கர்ப்பத்தை” கஷாயம் வைத்தே கலைத்த இரக்கமில்லாத மாமியார்...எதற்காக இந்த வெறி?

வரதட்சணை கொடுமையில் கஷாயத்தில் விஷம் வைத்து மருமகளின் கருவை கலைத்த மாமியார்.. ஒரு பெண்ணின் வாழ்வையே பாழாக்கிய இந்த சம்பவம் கடலூரில் நடந்துள்ளது..!

மருமகளின் ”கர்ப்பத்தை” கஷாயம் வைத்தே கலைத்த இரக்கமில்லாத மாமியார்...எதற்காக இந்த வெறி?

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் முத்தையா நகரை சேர்ந்தவர் சரவணன்-நர்மதா தம்பதி. வன அலுவலராக பணி புரியும் நர்மதாவின் கல்யாணத்தின்போது, பெண்ணின் பெற்றோர் நிறைய சீர்வரிசை பொருட்களை தந்துள்ளனர்.

ஆனாலும், இன்னும் வேண்டும் என்று நச்சரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் நர்மதாவின் கணவனும், மாமியாரும். 25 பவுன் நகையும், .5 லட்சம் ரூபாய் கூடுதல் பணத்தையும் வரதட்சணையாக வாங்கி வரும்படி  நர்மதாவை மாமியார் கொடுமைப்படுத்தி வந்துள்ளதாகவும் தெரிகிறது. 

இந்த சூழ்நிலையில் நர்மதா கர்ப்பமானார். 5 மாத கர்ப்பிணியாக இருந்தபோதும் மாமியாரின்  கொடுமைகள் தொடர்ந்த வண்ணம் இருந்துள்ளது. 
இந்நிலையில் சம்பவத்தன்று,  கஷாயம் வைத்த மாமியார், அதில் விஷத்தை கலந்து நர்மதாவுக்கு தந்துள்ளார். இதில் 5 மாத கர்ப்பிணியாக இருந்த நர்மதாவின் கர்ப்பம் கலைந்துவிட்டது.

இதுபற்றி உண்மையறிந்து பொறுமை இழந்த நர்மதா, அளித்த புகாரின் பேரில் சரவணன், மற்றும் அவரின் தாய் மல்லிகா, இவரது மகள்கள் ரேவதி, கவிதா என்கிற பூரணி ஆகியோர் விசாராணை செய்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக  வழக்குப்பதிவு செய்த போலீசார், கணவனையும், மாமியாரையும்   கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் நாத்தனார்கள் 2 பேரையும்  போலீசார் தேடி வருகிறார்கள்.

இத்தனை காலமும் குறைந்திருந்த வரதட்சணை கொடுமை மீண்டும் இந்தியாவில் தலைதூக்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் கடந்த வருடம் கேரளாவையே இந்த வரதட்சனை பிரச்சனை உலுக்கிஎடுத்துவிட்டது என்றே சொல்லலாம்.