மனைவி என நினைத்து சாலையோரம் உறங்கிகொண்டு இருந்த பெண்ணை கொலை செய்த நபர் கைது

மனைவி என நினைத்து சாலையோரம் உறங்கிகொண்டு இருந்த பெண்ணை கொலை செய்த நபர் கைது

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் மனைவி என நினைத்து சாலையோரம் உறங்கிகொண்டு இருந்த பெண்ணை கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

ஆம்பூரை சேர்ந்த தனலட்சுமி ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பிச்சை எடுத்து வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலையை சேர்ந்த தேவேந்திரன் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த அவர் ஆம்பூருக்கு சென்றுவிட்டார். இதனிடையே தனலட்சுமி, கௌசர் உள்ளிட்ட சிலர் சாலையோரம் ஒரு கடையின் வளாகத்தில் படுத்து உறங்கிகொண்டு இருந்தனர்.

அப்போது அங்கு வந்த தேவேந்திரன் தனது மனைவி என நினைத்து கௌசரை கத்தியால் குத்தி கொலை செய்தார். இதை தடுக்க முயன்ற அவரது மனைவிக்கும் கத்தி குத்து விழுந்தது. தகவல் அறிந்து வந்த ஆம்பூர் போலீசார் கொலையாளியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.