மது போதையில் இளைஞர் படுகொலை செய்த சம்பவம்...

கேரள மாநிலம் இடுக்கி அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில், இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

மது போதையில் இளைஞர் படுகொலை செய்த சம்பவம்...

இடுக்கி | குமுளி ரோசாப்புக்கண்டத்தில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். நண்பர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளி ரோசாப்புக்கண்டத்தைச் சேர்ந்தவர் 36 வயது நிரம்பிய உஸ்மான் அலி. 

உஸ்மான் அலியும், அவரது உறவினரான கம்பத்தைச் சேர்ந்த காதர் மற்றும் ரோசாப்புக்கண்டத்தைச் சேர்ந்த அஜேஷ் ஆகிய மூவரும் குமுளி கேரள பேருந்து நிலையம் அருகே உள்ள மதுபான பாரில் மதுபானம் அருந்தியுள்ளனர். மது போதையில் குடும்ப விஷயம் குறித்து பேசிய போது தகராறு முற்றியது.

மேலும் படிக்க | கிரிப்டோ கரன்சி வைத்து ஏமாற்றியவரை கடத்திய நபரால் பரபரப்பு...

இதையடுத்து பாரில் இருந்து வெளியே வந்த உஸ்மான் அலியை அஜேஷும், காதரும் சேர்ந்து கத்தியால் குத்தியுள்ளனர். இதில் உஸ்மான் அலி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த கேரள குமுளி போலீசார் உஸ்மான் அலியின் சடலத்தை மீட்டு குமுளியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து குமுளி ரோசாப்புக்கண்டத்தைச் சேர்ந்த அஜேஷ், கம்பத்தைச் சேர்ந்த காதர் ஆகியோரை கைது செய்த கேரள குமுளி போலீஸார் அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க | பிடிக்காதவரை காதல் திருமணம் செய்து கொண்டதால்..... மகளின் கணவனை...!!