காதலுக்கு மறுப்பு தெரிவித்த அக்காவை!! கொடூரமாக கொலை செய்த தங்கை...

கேரளாவில் தனது காதலை கெடுத்த அக்காவை தீ வைத்து எறித்த தங்கையின் வெறிச்செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலுக்கு மறுப்பு தெரிவித்த அக்காவை!! கொடூரமாக கொலை செய்த தங்கை...

கேரள மாநிலம் எர்ணாகுளம் அடுத்துள்ள பரவூர் பகுதியை சேர்ந்த சிவானந்தன்,  ஜிஜி தம்பதியினருக்கு விஸ்மயா, ஜித்து என்ற 2 மகள்கள் உள்ளனர். 

இந்நிலையில், கடந்த 21-ந்தேதி சிவானந்தன், அவர் மனைவி ஜிஜி  இருவரும் நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு செல்வதற்காக, உடல்நிலை பாதிப்பு உள்ள  இளைய மகள் ஜித்துவின் கைகள் இரண்டையும் கட்டி படுக்கையில் போட்டு விட்டு தாய் தந்தையர் இருவரும் வெளியில் சென்றிருந்தனர். இவர்களின் மூத்த மகள் விஸ்மயா தங்கையை பார்த்துக்கொண்டு வீட்டில் இருந்துள்ளார்.

இதனையடுத்து மருத்துவமனைக்கு சென்ற தம்பதி இருவரும் திரும்பி வீட்டிற்கு வந்தபோது, வீட்டுக்குள் மூத்த மகள் விஸ்மயா உடல் கருகி இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும், இளைய மகள் ஜித்து வீட்டுக்குள் இல்லாததை, கண்டு உடனே இது குறித்து போலீசில் புகார் செய்தனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த பரவூர் போலீசார் ஜித்துவை தேடும் வேட்டையில் இறங்கினர்.

அப்போது, பரவூர் அடுத்துள்ள காக்க நாடு நகர் பகுதியில் சுற்றித்திரிந்த ஜித்துவை பரவூர் போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், ஜித்து கூறியது அதிர்ச்சியாக இருந்தது.  

வீட்டில் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்தேன்,  எனது கைகள் கட்டுகளை அவிழ்த்து விடுமாறு அக்காவிடம் கூறினேன், அக்கா விஸ்மயா கை கட்டுகளை அவிழ்த்து விட்டார். அப்போது எனது காதலை அக்கா கெடுத்து விட்டதாக கூறி அக்காவிடம் சண்டை போட்டேன், அவளும் என்னிடம் சண்டை போட்டார், ஒரு கட்டத்தில் கோபம் கொண்டு வீட்டில் இருந்த கத்தியை எடுத்து அக்கா உடலில் சரமாரியாக குத்தினேன்.

இதில் சம்பவ இடத்திலேயே அக்கா விஸ்மயா பரிதாபமாக உயிரிழந்தார். உடனே, என்ன செய்வதென்று தெரியாமல் வீட்டிலிருந்த மண்ணெண்ணெயை எடுத்து அக்கா மீது ஊற்றி தீ வைத்து எரித்துவிட்டேன். உடல் முழுவதும் தீயில் கருகிய பின்பு வீட்டை விட்டு வெளியேறியதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து தனது காதலை கெடுத்த அக்காவை தீ வைத்து எறித்த தங்கையின் வெறிச்செயல் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.