சாராயம் குடிக்க பணம் தர மறுப்பு... போதையில் வீட்டை கொளுத்திய கணவன்...
ஓமலூர் அருகே மதுகுடிக்க பணம் தர மறுத்ததால் வீட்டிற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கன்னியாகுமரியில் சாமியார் மீது இளம்பெண் ஒருவர் புகார் அளித்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி | நாகர்கோயில் இருகே களியங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். தன்னை ஒரு நாகம் என கூறிக் கொள்ளும் இவர் மீது சில நாட்களுக்கு முன்பு தம்மத்து கோணம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், சாமியார் சுரேஷ்குமார் மீது அதிரடி புகார் ஒன்றை அளித்திருந்தார்.
சாமியார் சுரேஷ் இரவு நேரங்களில் பாம்புகளோடு உறங்குவதாகவும், அப்போது பாம்புகளின் வாயில் இருந்து வரும் நவரத்தினக் கற்கள் எனக்கூறி தன்னிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்ததாகவும் இரணியல் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
மேலும் படிக்க | நூதன முறையில் திருட்டில் ஈடுபட்ட குடுகுடுப்பக்காரர்களைப் பிடித்துக் கொடுத்த பெண்கள்...
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த இரணியல் போலீசார் சுரேஷ்குமார் மற்றும் அவரது உதவியாளர் அசோக்குமாரை கைது செய்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பே சாமியார் சுரேஷ்குமாருக்கு சனத் என்பவருடன் நட்பு உண்டானது. கப்பலில் பணியாற்றும் சனத் அதே பகுதியில் புதிய வீடு ஒன்றை கட்டி வந்துள்ளார். இதற்காக சுரேஷ்குமாரிடம் இருந்து குறிப்பிட்ட அளவு தொகையை கடனாக வாங்கியிருந்தார் சனத்.
இதையடுத்து நாகராஜா கோவிலுக்கு குடமுழுக்கு செய்தபோது சுரேஷ்குமாருக்கும் சனத்துக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பிரச்சினை எழுந்ததாக தெரிகிறது.
மேலும் படிக்க | கேரளாவில் ‘நரபலி’ ... இரு பெண்களை துண்டு துண்டாக வெட்டி புதைத்த பயங்கரம்...
இதையடுத்து ஒருவருக்கொருவர் அளித்துக் கொண்ட பரிசுப் பொருட்களையும் திருப்பி வாங்கியதோடு பரஸ்பரம் பிரிந்து போயினர். ஆனால் சுரேஷ்குமாரிடம் இருந்து வாங்கிய பணத்தை மட்டும் சனத் திருப்பி அளிக்காமல் குடும்பத்தோடு தப்பி சென்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து வாங்கிய கடனை திரும்ப கேட்டார் என்ற ஒரே காரணத்துக்காக சாமியாரை எப்படியாவது சிக்க வைக்க வேண்டும் என நினைத்து ஆடிய நாடகம்தான் இது என சாமியாரின் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.
கொடுத்த கடனை திருப்பி கேட்ட சாமியாரை சிக்க வைக்க இளம்பெண் நாக முத்து மீது மோசடி புகாரளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | ஏரிக்கரையில் எரிக்கப்பட்ட மண்டை ஓடு... கொலையா? நரபலியா?
தலைமைக்காவலர் வீட்டில் 20 சவரன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்ப்வம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி பி அன்ட்டி காலனியை சேர்ந்தவர் மாரிச்செல்வம் (47). இவர் பேரூரணி காவலர் பயிற்சி மையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வேல்த்தாய் (37).
இவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 18ம் தேதி குடும்பத்தோடு வெளியூர் சென்று விட்டு நேற்று ஊர் திரும்பியுள்ளனர்.
மேலும் படிக்க | மார்க்கெட்டில் நடந்த கொலையின் எதிரொலி... கடையடைப்பில் ஈடுபட்ட வணிகர்கள்...
அப்போது பீரோவில் இருந்த 20 பவுன் நகைகள் கொள்ளை போயிருந்தது. இதன்மதிப்பு ரூ.8 லட்சம் ஆகும். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சிப்காட் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்கள் யார்?என அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | ஆட்டோவை மீட்க சென்றவர் குழந்தைகளை கடத்திய மர்ம கும்பல்...
கலாஷேத்திரா மாணவிகள் பாலியல் புகார் குறித்தான விரிவான விசாரணை அறிக்கை திங்கட்கிழமை அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் குமரி கூறியுள்ளார்.
சென்னை திருவான்மியூர் உள்ள கலாஷேத்திரா வளாகத்தில் உள்ள ருக்மணி தேவி நுண்கலை கல்லூரியில் படிக்கும் மாணவிகளை பேராசிரியர்கள் உட்பட நான்கு நபர்கள் பாலியல் துன்புறுத்தல்கள் செய்ததாக 175 க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்லூரி வளாகத்திற்குள்ளாக போராட்டம் நடத்தி வரும் நிலையில் அது குறித்து தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் குமரி நேரில் வருகை தந்து விசாரணை நடத்தினார்.
விசாரணைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் குமரி , இந்த கலாஷேத்திரா விவகாரம் தொடர்பாக விரிவாக விசாரணை செய்து திங்கள் கிழமைக்குள் அறிக்கை அரசுக்கு சமர்ப்பிக்கப்படும் என்றும், சில மாணவிகள் ஹைதராபாத் சென்றுள்ளதால் ஐந்து மாணவிகளை ஸ்கைப் மூலமாகவும் 12 மாணவிகளை நேரில் விசாரணை செய்ததாகவும் கூறினார்.
மேலும் நூற்றுக்கு மேற்பட்ட மாணவிகள் எழுத்துப்பூர்வமாக என்னிடம் புகார் அளித்துள்ளனர் என்று தெரிவித்ததோடு மாணவிகள் புகார் அளித்ததற்கான ஆதாரங்களும் உள்ளன என தெரிவித்தார். மேலும், திங்கள் கிழமை மாணவர்களுக்கு தேர்வு நடைபெற உள்ளதால் போராட்டத்தை நிறுத்த சொல்லி மகளிர் ஆணையம் சார்பில் கோரிக்கை வைத்ததாகவும் மாணவர்களும் போராட்டத்தை கைவிடுவதாக வாக்குறுதி அளித்துள்ளதாகவும் கூறினார்.
இதையும் படிக்க: சென்னை சென்ட்ரலில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்...!!
தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் படி தமிழக முழுதும் ஆபரேஷன் கஞ்சா வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு பகுதியிலும் இருக்கக்கூடிய காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான போலீசார் தொடர்ச்சியாக போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்களையும், கடத்துபவர்களையும் கண்காணித்து கைது செய்து தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதே போன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆய்வாளர் சசிகலா தலைமையிலான போலீசார் இன்று அதிகாலை சோதனையில் ஈடுபட்ட போது டெல்லியில் இருந்து வந்த கிராண்ட் ட்ரங்க் விரைவு ரயிலில் பயணிகளிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது ஒருவருடைய பையில் மட்டும் 10 கிலோ கஞ்சா இருந்ததை அறிந்த போலீசார் உடனடியாக அவரை காவல் நிலையம் அழைத்துக் கொண்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கேரள மாநிலம் மல்லாபுரம் பகுதியைச் சேர்ந்த அப்துல் காதர் வயது 49 என்பது தெரியவந்தது. மேலும் இவர் கஞ்சாவை சென்னையில் உள்ள அவருடைய நண்பரிடம் சேர்ப்பதற்காக வந்தது தெரிய வந்தது.
இந்த நிலையில் வழக்கமான சோதனையில் சிக்கிக் கொண்ட அப்துல் காதரை போலீசார் அவரிடம் இருந்த 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிக்க: புள்ளிங்கோக்களுக்கு போலீஸ் கட்டிங் செய்த ஆசிரியர்...!!!
பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக சென்னை கலாஷேத்ராவில் விடிய விடிய போராட்டம் நடைபெற்ற நிலையில், சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு மகளிர் ஆணையத்தலைவர் குமாரி விசாரணை நடத்தினார்.
திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ராவின் கீழ் செயல்படும் ருக்மணி தேவி நுண்கலை கல்லூரியில் நடனம் உள்ளிட்ட கலைகள் கற்றுத் தரப்படுகின்றன. இந்நிலையில் இங்கு பயிலும் மாணவிகளுக்கு 4 பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பான நடவடிக்கைக்கு உத்தரவிட்டிருந்த தேசிய மகளிர் ஆணையம், பொய் குற்றச்சாட்டு எனக்கூறி அறிக்கையை திரும்பப் பெற்றது.
இதையும் படிக்க : வேல்முருகனின் கேள்விக்கு கடுப்படைந்த அமைச்சர் எம்.ஆர்.கே....!
இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவிகள் உரிய நடவடிக்கை கோரி கலாஷேத்ராவில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் உறுதியளித்ததன் பேரில், மாணவிகள் கலைந்து சென்றனர். பின்னர் போராடிய மாணவிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் கைவிடப்பட்டன.
இந்நிலையில் விடிய விடிய போராட்டம் நடைபெற்றதை அடுத்து, குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரி நிர்வாகம் விளக்கம் அளித்தது. சம்பவம் தொடர்பாக மத்திய அரசிற்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் மாணவிகள் தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து புகார் குறித்து, தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவர் குமாரி மாணவிகளிடம் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.