குடிபோதையில் கத்தியை காட்டி காவலாளியை மிரட்டிய கும்பல் கைது.!!

சென்னையில் குடிபோதையில் கத்தியை காட்டி மிரட்டிய 5 பேர் அடங்கிய கும்பலை போலீசார் கைது செய்தனர்.

குடிபோதையில் கத்தியை காட்டி காவலாளியை மிரட்டிய கும்பல் கைது.!!

சென்னை காசிமேட்டில் உள்ள பூண்டி தங்கம்மாள் தெருவில் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் மதுபானம் அருந்துவதற்காக வந்த 5 பேர் கொண்ட கும்பலை, அங்கு காவலாளியாக இருந்த வாட்ச்மேன் இங்கு மதுபானம் அருந்தக் கூடாது என்று கூறி எச்சரித்ததாக சொல்லப்படுகிறது.

அப்போது காவலாளியிடம் தகராறில் ஈடுபட்ட கும்பல், திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த, தனிப்படை காவலர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பின்னர் இச்சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியான குள்ள கார்த்தியை கைது செய்தனர்.

இவர் மீது கொலை மற்றும் வழிப்பறி சம்பவங்கள் என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய தமிழரசன், அஜய் நேசமணி, மனோகர் ஆகிய 4 பேரையும் சேர்த்து மொத்தம் 5 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்...