காதல் திருமணம் செய்து கொண்ட மகள்...ஆத்திரத்தில் மருமகனின் தாயாரை வெட்டிக் கொன்ற தந்தை!

காதல் திருமணம் செய்து கொண்ட மகள்...ஆத்திரத்தில் மருமகனின் தாயாரை வெட்டிக் கொன்ற தந்தை!

ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே உள்ள பள்ளப்பச்சேரி  கிராமத்தை சேர்ந்த கண்ணாயிரம் என்பவரின் மகள் காவ்யா என்பவரை, அதே கிராமத்தை சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் வினித் என்பவர் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதனால்  இரண்டு குடும்பத்திற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் பெண்ணின் தந்தை கண்ணாயிரம் என்பவர் ஆத்திரத்தில் மருமகனின் தாய் ராக்கு என்பவரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்தார்.

இந்த சம்பவம் குறித்து கமுதி டிஎஸ்பி மணிகண்டன்,  அபிராமம் காவல் ஆய்வாளர் கலைவாணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த பெண்ணின் உடலை கைபற்றி உடற்கூறு ஆய்வுக்காக கமுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இது குறித்து அபிராமம் போலீசார் கொலை செய்த பெண்ணின் தந்தை கண்ணாயிரத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.