மருமகளுக்கே பாலியல் தொல்லை கொடுத்து வந்த காமவெறி பிடித்த மாமனார்...நடந்தது என்ன?

சொந்த மருமகளுக்கே பாலியல் தொல்லை கொடுத்து வந்த மாமனாரை போலீசார் கைது செய்த சம்பவம் ஈரோட்டில் அரங்கேறியுள்ளது.

மருமகளுக்கே பாலியல் தொல்லை கொடுத்து வந்த காமவெறி பிடித்த மாமனார்...நடந்தது என்ன?

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியை சேர்ந்தவர் சேகர். 58 வயதான இவர், தான் வசிக்கும் பகுதியிலேயே சொந்தமாக செருப்பு கடை ஒன்றை வைத்து  செருப்பு தைத்து வருகிறார். கூலி வேலை செய்து வரும் இவருக்கு திருமணமாகிய ஒரு மகன் உள்ளார். இருப்பினும் அப்பா, மகன், மருமகள் என மூவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். திருமணமாகி 10 வருடங்கள் கடந்தும் குழந்தை இல்லாத தம்பதி,  அந்த பகுதியில் உள்ள தனியார் ஆயத்த ஆடை நிறுவனங்களில் தையல் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகிறார்கள். 

இந்நிலையில் மருமகள் வீட்டில் தனியாக இருக்கும் நேரங்களில் மாமனார் சேகர் அவருக்கு பாலியல் தொல்லை தந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து  கணவரிடம் அந்த பெண் புகர் அளித்ததையடுத்து, உடனே மகன் இதுபற்றி அப்பா சேகரிடம் கேட்டுள்ளான். அதற்கு அவர்  நான் விளையாட்டாக தான் செய்தேன் என்று பதில் சொல்லி சமாளித்து வந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மருமகள் இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். மருமகள் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சேகரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட சேகரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

மேலும், மாமனாரே சொந்த மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.