தனியாக இருந்த கண்ணன்..மருமகனை கொலை செய்த மாமனார்.!!

தனியாக இருந்த கண்ணன்..மருமகனை கொலை செய்த மாமனார்.!!

தென்காசி அருகே மருமகனை கொலை செய்த மாமனாரை போலீசார் கைது செய்தனர். கடையநல்லூர் பகுதி புதுக்குடியை சேர்ந்தவர் கண்ணன்.
Published on

தென்காசி அருகே மருமகனை கொலை செய்த மாமனாரை போலீசார் கைது செய்தனர். கடையநல்லூர் பகுதி புதுக்குடியை சேர்ந்தவர் கண்ணன்.

இவர் அதே பகுதியில் கூழ் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில்  வீட்டில் தனியாக இருந்த கண்ணனிடம் அவரது மருமகன் சரத்குமார்  தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனால்  ஆத்திரமடைந்த கண்ணன், அரிவாளால்  மருமகனை சரமாரியாக வெட்டிய நிலையில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கண்ணனை கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com