
சென்னையில் நர்சிங் மாணவியிடம் தவறாக நடந்துகொண்டு பாலியல் தொல்லை கொடுப்பதாக தனியார் மருத்துவமனை உரிமையாளரான தலைமை மருத்துவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் தனியார் மெடிக்கல் அகாடமியில் நர்சிங் டிப்ளமோ பிரிவில் படித்து வருகிறார். மேலும் நர்சிங் படிப்பு தொடர்பாக அகாடமி பரிந்துரையின் பேரில் அந்த மாணவி இரவு நேர பயிற்சியாக அயனாவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 8 ஆம் தேதி இரவு 10 மணியளவில் நர்சிங் மாணவி தனியார் மருத்துவமனைக்கு பணியாற்றச் சென்றபோது அந்த மருத்துவமனையின் உரிமையாளரும், தலைமை மருத்துவருமான விவேகானந்தன் என்பவர் மாணவியை தனியாக அழைத்து குடும்ப விவரங்களை கேட்டறிந்ததாகவும், பின்னர் உன்னையும், உனது குடும்பத்தையும் இனி, தான் பார்த்துக் கொள்கிறேன் எனவும், மருத்துவமனையிலேயே உயர்ந்த சம்பளத்தில் வேலைக்கு சேர்த்துக்கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
பின்னர் அந்த மாணவி அங்கிருந்து சென்றுவிட்ட நிலையில் மீண்டும் மாணவியை வற்புறுத்தி பாலியல் ததாகக் கூறப்படுகிறது.
தொடர்ந்து, மருத்துவர் விவேகானந்தன் அளித்த பாலியல் தொல்லை குறித்து நர்சிங் மாணவி தனது அகாடமியில் உள்ள பேராசிரியை ஒருவரிடம் செல்போனில் தொடர்புகொண்டு கூறயதாகவும், அதற்கு அவர் தான் தற்போது ஊரில் இல்லை எனவும், இத்துறையில் இதெல்லாம் சகஜம் எனவும், மருத்துவர் கூறும்படி கேட்டு நல்ல முறையில் நடந்து கொள்ளும்படியும் மாணவியிடம் தெரிவித்துள்ளார். மேலும், தானும் இவற்றையெல்லாம் தாண்டியே வந்துள்ளதாகவும், மருத்துவர் மற்றும் மருத்துவமனையைப் பற்றி எதையும் தவறாக வெளியில் கூற வேண்டாம் எனவும் மாணவியிடம் பேராசிரியை அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நர்சிங் மாணவி பேராசிரியையிடம் செல்போனில் பேசிய ஆடியோ பதிவுடன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் மருத்துவமனை உரிமையாளரான தலைமை மருத்துவர் மற்றும் அவருக்கு ஆதரவாக செயல்பட்ட பேராசிரியை மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படி அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்புகாரின் அடிப்படையில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க : “ Soul of Varisu " வாரிசு படத்தின் 3- வது சிங்கிள் வெளியானது...!