மாமியார் தலையில் கல்லை போட்டு கொன்ற மருமகள்...தீ விபத்தில் இறந்ததாக கண்ணீருடன் நாடகமாடியது அம்பலம்...!

திருச்சி அருகே மாமியார் தலையில் கல்லை தலையில் போட்டு கொலை செய்துவிட்டு இறந்ததாக கண்ணீருடன் மருமகள் நாடகமாடியது அம்பலமானது.

மாமியார் தலையில் கல்லை போட்டு கொன்ற மருமகள்...தீ விபத்தில் இறந்ததாக கண்ணீருடன் நாடகமாடியது அம்பலம்...!

திருச்சி தாராநல்லூரை அடுத்த வரகனேரி விஸ்வாஸ் நகரில் வசித்து வருபவர் 46 வயதுடைய பெண்மணி. இவர் சமையலறையில் ஏற்பட்ட தீ விபத்தால் இறந்தார் என்று காந்தி மார்க்கெட் போலீசாருக்கு நேற்று மாலை தகவல் கிடைத்தது.

தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த திருச்சி காந்தி மார்க்கெட் காவல்துறையினர் உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் - பிரேதப் பரிசோதனை விவரங்கள் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை, ஆனால் இறந்த பெண்ணின் தலையில் பல்வேறு இடங்களில் கம்பியை வைத்து குத்தியதற்கான அடையாளங்கள் காணப்பட்டது.

இது தொடர்பாக காவல்துறையினர் இறந்த பெண்ணின், மருமகளான ரேஷ்மாவிடன் விசாரணை செய்தனர். விசாரணையில் அந்த பெண் தீ விபத்தால் இறக்கவில்லை என்றும் அவரின் மருமகளான ரேஸ்மா தான், அவரை  ஸ்குரூ டிரைவரால் தலையில் பல முறை குத்தியும், அம்மிக்கல்லை தலையில் போட்டும் கொலை செய்தது தெரியவந்தது.

தொடர்ந்து விசாரித்ததில் மருமகளான ரேஷ்மாவிற்கு, அவரது மாமியாரான அந்த பெண்ணிற்கு இடையே அடிக்கடி பிரச்சசை ஏற்பட்டு வந்ததாகவும், இரண்டு முறை மருகளான ரேஷ்மாவை கருக்கலைப்பு செய்ய சொல்லி வற்புறுத்தியதாக தெரியவந்தது.

இதனால் மாமியார் மீது ஆத்திரத்தில் இருந்த மருமகள், அவரது கணவரான ஆசீப்கான் நிகழ்ச்சி ஒன்றிற்க்காக வெளியில் சென்ற நேரம் பார்த்து, மாமியாரை கீழே தள்ளி ஸ்குரூ டிரைவரால் தலையின் பல இடங்களில் குத்தியும், அம்மிகல்லை எடுத்து தலையில் போட்டும் கொன்றுள்ளார். அதன்பின்னர் வெளியில் தெரிந்தால் மாட்டிக்கொள்வோம் என நினைத்து சமையலறையில் இருந்த சீலிண்டரை திறந்துவிட்டு தீ ஏற்படும் வகையில் செய்துள்ளார். என்பது விசாரணையில் தெரியவந்தது.

இது தொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார், மருமகள் ரேஷ்மா உடன் சேர்ந்து வேறு யாரேனும் இந்த கொலையை  செய்தார்களா என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.