தாறுமாறாக ஓடிய கார்.... தர்ம அடி கொடுத்த மக்கள்..!!

தாறுமாறாக ஓடிய கார்.... தர்ம அடி கொடுத்த மக்கள்..!!

புதுச்சேரி நகரப்பகுதியில் அதிவேகமாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய பின்னர் நிற்காமல் சென்ற காரை பொதுமக்கள் மடக்கி பிடித்து அதிலிருந்தவரை நபருக்கு தர்ம அடிகொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்

புதுச்சேரி நகரப்பகுதியான செஞ்சி சாலையில் கார் ஒன்று அதிவேகமாக சென்றுள்ளது.  அப்போது சாலையில் சென்றுகொண்டிருந்த 5-க்கும் மேற்பட்ட வாகனங்களின் மீது மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றுள்ளதாக தெரிகிறது.  இதனையடுத்து காரை விரட்டி பின் தொடர்ந்து வந்த பொதுமக்கள் புஸ்சி வீதியில் காரை மடக்கி பிடித்து காரை ஓட்டி வந்தரை தர்ம அடி கொடுத்து ஒதியஞ்சாலை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் காரை அதிவேகமாக ஓட்டி வந்தது கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பகுதியை சேர்ந்த புகழேந்தி என்பது தெரியவந்துள்ளது.  பின்னர் போக்குவரத்து போலீசார்,  புகழேந்தி மீது பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து மது அருந்தி உள்ளாரா  என்ற மாதிரியையும்  எடுத்துள்ளனர்.

புதுச்சேரி நகரப்பகுதியில் அதிவேகமாக காரை ஓட்டிய நபரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிக்க:    டிஎன்பிஎஸ்சி தேர்வு நேரத்தில் மாற்றம்....