சொத்து பிரச்சனையால் அண்ணனை பெட்ரோல் ஊற்றி எரித்த கொலை செய்த தம்பி...

ஆரணி அருகே சொத்து பிரச்சனை காரணமாக சொந்த அண்ணனை தம்பியே பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சொத்து பிரச்சனையால் அண்ணனை பெட்ரோல் ஊற்றி எரித்த கொலை செய்த தம்பி...

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள விளைசித்தேரி கிராமத்தை சேர்ந்த வெள்ளை என்பவரின் மகன்கள்  ரமேஷ், புருஷோத்தமன், ராஜசேகர். இதில், ரமேஷ், ராஜசேகர் சென்னையில் வேலை செய்து வரும் நிலையில், புருஷோத்தமன் அரணியிலேயே நெசவு தொழில் செய்து வந்தார். இந்நிலையில், புருஷோத்தமனுக்கும், ராஜசேகருக்கு குடும்ப சொத்தை பிரிப்பதில் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

வழக்கம் போல் புதன்கிழமை இருவருக்கும் இடையே  வாக்குவாதம்  ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த தம்பி, மாடியில் தூங்கிக்கொண்டிருந்த அண்ணன் புருஷோத்தமன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதில் அலறி துடித்த புருஷோத்தமன் தீயில்  எரிந்தபடி  மாடியில் இருந்து  கீழே குதித்ததாக தெரிகிறது.. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், இன்று காலை புருஷோத்தமன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ஆரணி காவல்துறையினர் அண்ணனை கொடூரமாக கொலை செய்த தம்பி ராஜசேகரை கைது செய்து போளூர் சிறையில் அடைத்தனர்.