தங்கையை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய அண்ணன்.. உருக்கமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்ற தங்கை.. பெரும் பரபரப்பு!!

தாம்பரம் அருகே தங்கையை ஆபாச படங்கள் எடுத்து மிரட்டிய அண்ணன் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தங்கையை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய அண்ணன்.. உருக்கமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்ற தங்கை.. பெரும் பரபரப்பு!!

சென்னை தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர் அன்னை அஞ்சுகம் நகர் பகுதியில் வசித்து வருபவர் நாகராஜ் (வயது-43) இவரது மனைவி பேபி (வயது-38). இவர்களுக்கு வெண்ணிலா என 21 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர் வழக்கம் போல் நேற்றிரவு வீட்டில் தூங்க சென்றனர்.

இந்நிலையில் இன்று காலை தந்தை நாகராஜ் எழுந்து பார்த்தபோது மகளை (வெண்ணிலா) காணவில்லை, அக்கம் பக்கத்தில் தேடியும் கிடைக்காததால் பின்னர் படுக்கை அறையில் சென்று பார்த்தும் கடிதம் ஒன்றை கண்டெடுத்தனர்.

அதில் அஞ்சுகம் நகர் பகுதியில் இருக்கும் தனக்கு அண்ணன் உறவு முறை உடைய (23வயது) மதிக்கதக்க முருகன் தன்னுடைய புகைப்படங்களை ஆபாசமாகவும், இருவரும் சேர்ந்து இருப்பது போலவும் சித்தரித்து வைத்து கொண்டு தன்னை தொடந்து மிரட்டுவதாகவும் என்னுடன் வாழ வில்லையென்றால் யாருடனும் வாழவிட மாட்டேன் எனவும் தன்னுடன் வரவில்லை என்றால் ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக கூறி மிரட்டியதாகவும், கடந்த ஐந்து நாட்களாகவே தொடர்ந்து என்னுடன் வரவேண்டும் என தொந்தரவு செய்து வந்ததாகவும் எனவே முருகன் கூட செல்ல விருப்பம் இல்லாமல் அவருடன் சென்று செல்போனில் உள்ள ஆபாச புகைபடங்களை டெலிட் செய்து விட்டு திரும்பி வந்து விடுவேன் என உருக்கமான கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தது.

இதையடுத்து அந்த கடிதத்தை எடுத்து கொண்டு அவரின் பெற்றோர்கள் பெருங்களத்தூர் பீர்க்கன்காரணை காவல் நிலையம் சென்று என் மகளை காணவில்லை என புகார் கொடுத்து கடித்தத்தை காண்பித்து கண்ணீர் மல்க மகளை கண்டுபிடித்து தருமாறு கோரிக்கை வைத்தனர்.  

உடனே நாகராஜிடம் காவலர் ஊருல நடக்காததா நடந்து விட்டது. இரண்டு பேரையும் சேர்த்து வையுங்கள் அண்ணன், தங்கை என்றால் என்ன திருமணம் செய்துகொள்ள கூடதா என கூறி அலச்சியமாக பதில் கூறியுள்ளார்.

இதற்கு தந்தை நாகராஜ் எப்படியாவது என் மக்களை கண்டு பிடித்து தரும்படி தாய் கதறி அழுததால் போலீசார் புகாரை எடுத்து கொண்டு காணமல் போன இருவரும் கிடைத்தால் உங்களிடம் ஒப்படைப்பதாக கூறி அவர்களை அனுப்பி வைத்துள்ளனர்.

அண்ணனே தங்கையின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து தங்கையை மிரட்டி கூட்டிச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.