உல்லாசத்திற்கு தடை- இரட்டை கொலை செய்ததாக கைதி வாக்குமூலம்!!

கன்னியாகுமரி இரட்டை கொலை குறித்த அதிர்ச்சியூட்டும் பின்னணியை கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி ஒப்புக் கொண்டுள்ளார்.

உல்லாசத்திற்கு தடை- இரட்டை கொலை செய்ததாக கைதி வாக்குமூலம்!!

முட்டம் மீனவ கிராமத்தில் பவுலின்மேரி மற்றும் அவரது தாய் திரேசம்மாள் ஆகியோர் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட வெள்ளிச்சந்தை காவல்துறையினர், அங்கு கிடந்த மங்கி குல்லா மூலம் கடியப்பட்டணத்தைச் சேர்ந்த அமலசுமன் என்பவரைக் கைது செய்தனர்.

அவரிடம் நடந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. மீன்பிடி தொழிலாளியான அமலசுமன் அதே பகுதியில் பல பெண்களை ஏமாற்றி உல்லாசமாக இருந்துள்ளார்.

அதன்படி, பவுலின்மேரி வீட்டிற்கு தையல் பயிற்சிக்கு வரும் பெண்ணிடமும் தகாத முறையில் நடக்க முயன்றுள்ளார். அதை அறிந்த பவுனில்மேரி, அமலசுமனைக் கண்டித்ததாக கூறப்படுகிறது. அந்த ஆத்திரத்தில், வீடு புகுந்து மகள் மற்றும் தாயைக் கொலை செய்ததாக அமலசுமன் ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவரிடம் இருந்து திருடப்பட்ட நகைகளைப் பறிமுதல் செய்த காவலர்கள், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.