பூங்காவில் சிறுவன் உயிரிழப்பு தாமாக முன்வந்த குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் !!!

பூங்காவில் சிறுவன் உயிரிழப்பு தாமாக முன்வந்த குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் !!!

பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் R.G. ஆனந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

இராசிபுரம் அருகே தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் குறித்து தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து இந்த விசாரணையை தொடங்கியது.சிறுவன் ரசாயன ரீதியாகவோ, நீரில் மூழ்கியோ இறக்க வில்லை என தெரியவந்துள்ளது.உடற்கூறு ஆய்வு முடிவில் இயற்கையான இறப்பு எனவும் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக குழுக்கள் அமைக்கப்பட்டு 7 நாட்களுக்குள் அந்த தனியார் பொழுதுபோக்கு பூங்கா பதிலளிக்கவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.இந்தக்குழுவின் விசாரணை அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 

இந்த தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் சிறுவன் இறப்புக்கு நஷ்ட ஈடு வழங்கும் வகையில், அந்த பூங்கா 4 லட்சம் ரூபாய் சிறுவன் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.சிறுவனின் பெற்றோருக்கு ரூ.4 லட்சத்திற்கான நஷ்ட ஈடு வழங்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் குழந்தை திருமணங்கள் தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால் அதிகளவிலான குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றன.

மேலும் படிக்க | திமுக நடத்திய முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் எத்தனை பேருக்கு வேலை கிடைத்துள்ளது ? முன்னாள் அமைச்சர் கேள்வி

சிதம்பரத்தில் சிறுமிகளுக்கு இருவிரல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என மருத்துவ அறிக்கையிலே உள்ளதாகவும், இதற்கான ஆதாரம் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் உள்ளது.நேற்று தான் கூறிய கருத்தை ஆளுநருக்கு எதிராக சில ஊடகங்கள் திரித்து கூறியுள்ளதாகவும், குழந்தை திருமணம் நடைபெற்றதாக சிறுமி மற்றும் அவர்களது பெற்றோர்களிடம் வற்புறுத்தி வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும், குழந்தைகளின் பாதுகாப்பு கருதி தமிழகத்தில் அடுத்த வாரத்தில் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் விசாரணை அமர்வுகள் பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட உள்ளது.இதன்மூலம் சிறு சிறு குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகள் உடனுக்குடன் தீர்வு காணப்படும் என்றார்.