கோவில் கணக்குகளை பார்ப்பதில் தகராறு : கோவில் நிர்வாக துணைச் செயலாளர் குத்தி கொலை !!

பணகுடி அருகே வடக்கன் குளத்தில்   விநாயகர்  கோவிலில் கோவில் நிர்வாக துணை செயலாளர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவில் கணக்குகளை பார்ப்பதில் தகராறு : கோவில் நிர்வாக துணைச் செயலாளர் குத்தி கொலை !!

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள வடக்கன் குளத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் ராஜபாண்டி. இவர் அதே பகுதியில் உள்ள அதிசய விநாயகர் கோவிலின் துணை செயலாளராக இருந்து வருகிறார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு இந்த கோவிலில்  திருவிழா நடைபெற்றது.

இந்தக் கோவில் வளாகத்தில் முருகன் கோவில் அம்மன் கோவில் மற்றும் விநாயகர் கோவில் என தனித்தனியே அமைந்துள்ளது இதில் முருகன் கோவில் மற்றும் விநாயகர் கோவிலுக்கு என இரண்டு கொடிமரங்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது .இதனிடையே அம்மன் கோவிலுக்கு இதே  ஊரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கொடிமரம் வைப்பதற்கு நன்கொடை அளித்து பணிகள் நடந்து வருகிறது.

இதனிடையே இன்று கோவிலில் உள்ள நிர்வாக அலுவலகத்தில் தலைவராக இருக்கும் மகேந்திர பூபதி (எ) சம்பத் மற்றும் ராஜகுமரன் ஆகியோர் உதவி செயலாளர் வெங்கடேஷ் ராஜபாண்டியன் மற்றும் நிர்வாகிகள் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் வெங்கடேஷ் ராஜ பாண்டிக்கு கத்தி குத்து விழுந்துள்ளது. இதில் வெங்கடேஷ் ராஜபாண்டி அவராகவே சென்று வடக்கன் குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் இதனிடையே வீட்டில் வைத்து திடீரென உயிரிழந்துள்ளார்.

இதில் கணக்கு வழக்குகளை பார்ப்பதில் ஏற்பட்ட தகராறில் வெங்கடேஷ் ராஜா மற்றும் நிர்வாகிகளுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது இதில் வெங்கடேஷ் ராஜா 2 பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்தியும் தாக்கியும் உள்ளனர். இதனிடையே அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய வெங்கடேஷ் ராஜா வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார். இதனிடையே சம்பவ இடத்திற்கு வள்ளியூர் எஸ்பி சமய சிங் மீனா மற்றும் பணகுடி போலீசார் சம்பத் மற்றும் ராஜகுமாரன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.