ஐ.ஏ.எஸ் நுழைவுத் தேர்வில் தோல்வி- இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

தாம்பரம் அருகே ஐ.ஏ.எஸ் நுழைவுத் தேர்வில் தோல்வியானதால் மிகுந்த மன வேதனையில் இருந்த இளம்பெண், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஐ.ஏ.எஸ் நுழைவுத் தேர்வில் தோல்வி- இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் ஸ்ரீராம் காலனியை சேர்ந்தவர் தான் எழிலரசி. இவர் சோழிங்கநல்லூரில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவரது கணவர் சண்முகம் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நிலையில் தனது மகள் பிரியதர்ஷினி உடன் தனியாக வசித்து வந்தார் எழிலரசி.

இதற்கிடையில் எழிலரசியின் மகள் பிரியதர்ஷினி ஐஏஎஸ் ஆவதற்காக நுழைவுத்தேர்வு எழுதி இருந்த நிலையில் அதில் அவர் தோல்வி அடைந்ததன் காரணமாக மிகுந்த மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வழக்கம்போல் தாய் எழிலரசி சோழிங்கநல்லூரில் உள்ள தான் பணிபுரியும் அரசு பள்ளிக்கு வேலைக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த பிரியதர்ஷினி  படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

அதன்பிறகு பணி முடிந்து வீடு திரும்பிய எழிலரசி வீட்டின் கதவு உட்பக்கமாக தாழிட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து அருகில் இருந்தவர்களை வரவழைத்து கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளார், அங்கு மகள் பிரியதர்ஷினி மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்த தாய் எழிலரசி கதறி அழுதார். பின்னர் தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக குரோம்பேட் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.