தஞ்சை : இளைஞர்களை அரிவாளால் வெட்டிய முதியவர்...! சமூகவலைதளங்களில் வைரலான வீடியோ..!

தஞ்சை : இளைஞர்களை அரிவாளால் வெட்டிய முதியவர்...! சமூகவலைதளங்களில் வைரலான வீடியோ..!

தஞ்சை அடுத்து கள்ள பெரம்பூரில் சாலை போடும் பணியில் ஈடுப்பட்டு கொண்டிருந்த இரண்டு தொழிலாளர்களிடம் 85 வயது முதியவர் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

தஞ்சை அடுத்துள்ள கள்ள பெரம்பூர் வடக்கு வளைவு பகுதியில் வசித்து வருபவர் 85 வயதான துரை.மாணிக்கம். இவர் வசிக்கும் தெருவில் சிமென்ட் சாலை போடும் பணி நடைப்பெற்று வருகிறது. இப்பணியில் திருவையாறு பகுதியை சேர்ந்த பிரபாகரன், மணிஷ் இருவரும் ஈடுப்பட்டு வந்தனர். துரை. மாணிக்கம் வீட்டின் அருகில் சாலை போடும்போது துரை.மாணிக்கத்திற்கும் பிரபாகரன், மனிஷ் ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த துரை. மாணிக்கம் கையில் வைத்திருந்த அரிவாளால் பிரபாகரன், மனிஷ் ஆகிய இருவரையும் வெட்டினார். இதில் தொழிலாளர்கள் இரண்டு பேரும் பலத்த காயம் அடைந்தனர். இச்சம்பவத்தை அப்பகுதியை சேர்ந்த ஒருவர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து உள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிக்க : தாமிரபரணி ஆற்றில் மாணவி தற்கொலை முயற்சி ...