க்ரைம்
தேனி அருகே பரபரப்பு... தமிழ் புலிகள் மாவட்ட செயலாளர் படுகொலை...
தேனி அருகே தமிழ் புலிகள் அமைப்பின் மாவட்ட செயலாளரை மர்மநபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் அடுத்த சி.எம்.எஸ். நகரை சேர்ந்தவர் தமிழ் புலிகள் அமைப்பின் மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு. இவர் அதேப்பகுதியில் மகளிர் குழு மூலம் கட்டண கழிப்பிடத்தை நிர்வகித்து வந்தார்.
இந்நிலையில், நேற்றிரவு கட்டண கழிப்பிடம் அருகே திருநாவுக்கரசு கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், திருநாவுக்கரசின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக தீவிரமாக விசாரணை மேற்கொண்டதில், அதேப் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ், கார்த்திக் இருவருக்கும் கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், கொலைக்கான காரணம் குறித்து விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.