சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை செய்த போலி சாமியார்... துணை போன தாயார்...

குடும்ப பிரச்சனை தீர்ப்பதாகக் கூறி 8 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட போலி சாமியாரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை செய்த போலி சாமியார்... துணை போன தாயார்...

இராமநாதபுர | 36 வயதான அருள்வில்சன் தேவகோட்டை அருகே உள்ள ஊஞ்சலையை சேர்ந்த 35 வயதான ரேணுகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 10 வயதில் மகனும், 8 வயதில் மகள் என இரு குழந்தைகள் உள்ளனர். அருள்வில்சன் சென்னையில் கூலி வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் இவரது மனைவி ரேணுகா திருப்பத்தூர் அருகே உள்ள வேட்டங்குடிபட்டி கிராமத்தில் வசிக்கும் முடியரசன் என்ற ராமகிருஷ்ணன் (48) என்பவரிடம் மாந்திரீகம், குறி பார்க்க சென்றுள்ளார். தனது கணவருக்கு சரியான வேலை அமையவில்லை எனக் குறிபார்த்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | காவி உடை அணிந்து சாமியார் நாடகம்...காருடன் மடக்கி பிடித்த போலீசார்..!

அப்போது மாந்தீரிகம் செய்த ரசமணி ஒன்றை ரேணுகாவிடம் கொடுத்து இதை கழுத்தில் அணிந்து கொண்டால் விரைவில் நீ கோடீஸ்வரி ஆகிடலாம், குடும்ப பிரச்சனையும் தீரும் என கூறி அடிக்கடி வந்து செல்லுமாறும் கூறியுள்ளதாக தெரிகிறது. தன் குடும்பப் பிரச்சனை தீரவேண்டும், தான்கோடீஸ்வரியாக வேண்டும் என்ற எண்ணத்தில் ரேணுகாவும் அடிக்கடி மாந்திரீக சாமியாரை பார்க்க சென்றுள்ளார்.

இதில் ரேணுகாவுக்கும் மாந்திரீக சாமியாரான ராமகிருஷ்ணனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து முத்து போட்டு பார்க்க வேண்டும் இதற்கு உன் 8 வயது மகளுக்கு அம்மாவசை இரவு சிறப்பு பூஜை செய்தால் செல்வம் பெருகும் என ரேணுகாவிடம் கூறி தன் பேச்சால் வசியம் செய்து நம்ப வைத்துள்ளார்.

மேலும் படிக்க | நகைகளை வைத்து பூஜை செய்வதாக மோசடி : போலி சாமியார் கைது !!

பின்,  திருப்பத்தூர் அருகே உள்ள மானகிரி காட்டுபகுதியில் உள்ள மாந்திரிக சாமியாரின் ஆசிரமத்தில், இரவு அம்மாவசை பூஜையில் 8 வயது சிறுமியை நிர்வாணமாக அமர வைத்து போலி சாமியார் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இதற்கு தாய் உடந்தையாக இருந்துள்ளதாகவும் இச்சம்பவம் குறித்து சிறுமி தனது தந்தையிடம் கூற, அவர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் வசம் புகார் தெரிவித்துள்ளார். புகாரினை அடுத்து திருப்பத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஆத்மநாபன், காவல் ஆய்வாளர் சுந்தர மகாலிங்கம் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு மேற்படி மாந்தீரிக போலீ சாமியார் ராமகிருஷ்ணன், மற்றும் உடந்தையாக இருந்த சிறுமி தாய் மீது நாச்சியாபுரம் போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

குடும்பத்தில் பிரச்சனை தீர்வதற்காக மாந்திரீக சாமியாரிடம் சென்ற பெண்ணின் குடும்பத்தையே பிரச்சனைக்குள்ளாக்கிய சாமியாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க | பள்ளி மாணவியை கடத்தி பாலியல் தொந்தரவு செய்த ஊழியர்...!