நடத்தையில் சந்தேகம்....தினமும் குடித்துவிட்டு தகராறு செய்த கணவன்....கத்தியால் குத்தி கொலை செய்த மனைவி.!

விழுப்புரம் அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட கணவன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடத்தையில் சந்தேகம்....தினமும் குடித்துவிட்டு தகராறு செய்த கணவன்....கத்தியால் குத்தி கொலை செய்த மனைவி.!

விழுப்புரம் அடுத்த நாயக்கன் தோப்பு பகுதியில் ராசாமணி என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியிருந்த தம்பதி சந்தோஷ்-சுரேகா தம்பதி, கூலித் தொழிலாளியான சந்தோஷ் மனைவி சுரேகாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். 

இந்தநிலையில் இன்று குடித்துவிட்டு நடத்தையில் சந்தேகம் உள்ளதாக கூறி மனைவியுடம் மீண்டும் தகராறு செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த மனைவி சுரேகா, கணவர் என்றும் பாராமல் காய்கறி நறுக்கும் கத்தியால் வயிறு மற்றும் மார்பு பகுதியில் சரமாரியாக குத்திப்படுகொலை செய்தார்.

வலியால் துடித்த கணவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். அதனைபின்னர் மனைவி சுரேகா விழுப்புரம் காவல் நிலையம் சென்று தனது கணவரை கொலை செய்துவிட்டதாக கூறி சரணடைந்தார். அதன்பின்னர் சுரேகாவின் வீட்டிற்கு சென்ற போலீசார், அங்கு ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்த சந்தோஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.