கல்லூரி விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை...

காஞ்சிபுரம் அருகே கல்லூரி விடுதியில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கல்லூரி விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை...

காஞ்சிபுரம் | வேலூர் மாவட்டம், காட்ப்பாடியை சேர்ந்தவர் வேலு. இவரது மகள் ஸ்வேதா (வயது 18). இவர் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே இருங்காட்டுக் கோட்டையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் B.Tech முதலாம் ஆண்டு படித்து வந்தார். ஸ்வேதா கல்லூரியில் சரிவர படிக்க வில்லை என்று கூறப்படுகிறது.

படிப்பு ஏர வில்லை என்று மன உளைச்சலில் இருந்து வந்த ஸ்வேதா நேற்று இரவு கடிதம் எழுதிவைத்து விட்டு தங்கும் விடுதியில் சீலிங் ஃபேனில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

மேலும் படிக்க | அமுதசுரபி ஊழியர்கள்: 30 மாதம் நிலுவை ஊதியத்தை தர வலியுறுத்தி மாடியில் ஏறி நின்று போராட்டம்

இதைப் பார்த்து அதிர்ந்த சக தோழிகள் நிர்வாகத்திடம் கூறி உடனே அவரை மீட்டு தண்டலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் சுவேதா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஶ்ரீபெரும்புதூர் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மாணவியின் தற்கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க | போராட்டத்தில் இறங்கிய தற்காலிக துப்புரவு பணியாளர்கள்...