பட்டப்பகலில் வழக்கறிஞரை வெட்டிக் கொலை செய்த பதற வைக்கும் சம்பவம்!!!

அரியலூர் - ஜெயங்கொண்டம் அருகே பட்டப் பகலில் 6 பேர் கொண்ட கும்பலால் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

பட்டப்பகலில் வழக்கறிஞரை வெட்டிக் கொலை செய்த பதற வைக்கும் சம்பவம்!!!

திருவாரூர் மாவட்டம் நாச்சியார் கோவிலை சேர்ந்த சுப்ரமணியன் மகன் சாமிநாதன். இவர் சென்னை உயர்நீதிமன்றவழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவரது தங்கையானதையல்நாயகிஎன்பவருக்கு திருமணம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு அதன்படிஅரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே அணைக்குடம் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று காலை திருமணம் நடைபெற்றது.

மே;லும் படிக்க | அரியலூர் : பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு தீர்ப்பு...!

திருமணத்திற்கான ஏற்பாடுகளை இரு வீட்டார்களும் செய்து மும்முறமாக கொண்டிருந்தனர். அப்போது சாமிநாதன் திருமணத்தை முடித்துவிட்டு அருகிலுள்ள ஹோட்டல் ஒன்றுக்கு சென்று தனது செல்போனில்யாரிடமோபேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் சாமிநாதனைசாராமறியாக வெட்டி கொடூரமாக கொலை செய்தனர்.

மேலும் படிக்க | உத்தமர்கோவிலில் நடந்த கட்டணமில்லா கல்யாணம்!!!

இதில் ரத்த வெள்ளத்தில்துடித்த சாமிநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்து வந்த ஜெயங்கொண்டம்டிஎஸ்பிகலைக்கதிரவன் தலைமையிலான போலீசார்சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்டவரின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்குபிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.