அரசு பஸ்ஸில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை :  பஸ் டிரைவரை கைது செய்த மகளிர் போலீஸ் !!

திருச்செந்தூர் வந்த அரசுப் பேருந்தில் பள்ளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பேருந்து ஓட்டுநரை திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அரசு பஸ்ஸில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை :  பஸ் டிரைவரை கைது செய்த மகளிர் போலீஸ் !!

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தை சேர்ந்தவர் சுரேஷ் (35). அரசு பஸ் டிரைவர். நேற்று மாலையில் விளாத்திகுளத்தில் இருந்து திருச்செந்தூருக்கு பேருந்தை ஓட்டி வந்தார்.  திருச்செந்தூர் அருகே பேருந்து வந்த போது அங்குள்ள ஸ்டாபில் சுமார் 12 வயது மதிக்கத்தக்க பள்ளி மாணவி பேருந்தில் ஏறி உள்ளார். அப்போது பேருந்தை ஓட்டிக்கொண்டிருந்த ஓட்டுநர் சுரேஷ், அந்த மாணவி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

சம்பவம் குறித்து திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார்  அரசு பேருந்து டிரைவர் சுரேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ்  வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து தூத்துக்குடியில் உள்ள போக்சோ கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.