வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை   : வடமாநில இளைஞர்கள் மீது உறவினர்கள் தாக்குதல் !!

பெரம்பலூர் அருகே வீட்டில் தனியே இருந்த 14 வயது சிறுமிக்கு   வட மாநிலத்தை சேர்ந்த 3 இளைஞர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்த வடமாநில இளைஞர்கள் மீது தாக்குதல்.

வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை   : வடமாநில இளைஞர்கள் மீது உறவினர்கள் தாக்குதல் !!

பெரம்பலூர் அருகேயுள்ள அருமடல் கிராமத்தில் வசிப்பவர் மணிகண்டன். இவர் தெருக்களில் கிடக்கும் "பழைய பேப்பர், பொருட்களை சேகரிக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது உறவுக்கார பெண்ணான 9 ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி கடந்த இரு தினங்களுக்கு முன் கோடை விடுமுறைக்காக இவரது வீட்டுக்கு வந்துள்ளார்.

நேற்று மணிகண்டன் வெளியே சென்றிருந்த நிலையில் சிறுமி மட்டும் வீட்டில் தனியே இருந்துள்ளார். அப்போது அதே பகுதியிலுள்ள சிமெண்ட் கல் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 3 இளைஞர்கள் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையறிந்த சிறுமியின் அண்ணன் மற்றும் அவரதுஉறவினர்கள் சேர்ந்து விட மாநில இளைஞர்களை பலமாக தாக்கியுள்ளனர்.

அதில் இளைஞர்கள் மூவரும் படுகாயமுற்றனர். இதனிடையே தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மருவத்தூர் போலீஸார் காயமடைந்த மூன்று பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக வந்த புகாரின்பேரில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சுனில் ராம், காமேஸ்வர் சிங் மற்றும் பெகு நாக சியா ஆகிய மூவர் மீதும் போக்ஸோ வழக்குபதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.