பாலியல் குற்றவாளிகள் என் கவுண்டர் செய்யப்பட்ட விவகாரம்.. காவல்துறையினர் போலி என் கவுண்டர் நடத்தியதாக குற்றச்சாட்டு!!

ஐதராபாத்தில், பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் போலி எண்கவுண்டர் நடத்தி குற்றவாளிகளை காவல்துறையினர் சுட்டுக் கொன்றதாக விசாரணைக் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

பாலியல் குற்றவாளிகள் என் கவுண்டர் செய்யப்பட்ட விவகாரம்.. காவல்துறையினர் போலி என் கவுண்டர் நடத்தியதாக குற்றச்சாட்டு!!

ஐதராபாத்தில் சத்தனபள்ளி டோல்கேட் அருகே, கடந்த 2019-ஆம் ஆண்டு பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேரை கைது செய்த காவல்துறை என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனா்.

இந்த நிலையில், நடந்த என்கவுண்டர் குறித்து விசாரிக்க, உச்ச நீதிமன்ற நீதிபதி வி.எஸ். சிா்புா்கா் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்திய பிறகு தனது அறிக்கையை தாக்கல் செய்துள்ள விசாரணை ஆணையம் போலியான என்கவுண்டர் நடத்தி 4 குற்றவாளிகளும் கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.மேலும், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட 10 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்யவும் ஆணையம் பரிந்துரை வழங்கியுள்ளது.