பெண் காவலருக்கு செக்ஸ் டார்ச்சர்... கூடுதல் எஸ்பி சார்லஸ் சஸ்பெண்ட்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் நீலகிரி மாவட்ட கூடுதல் எஸ்பி சார்லஸை சஸ்பெண்ட் செய்து முதன்மை செயலாளர் பிரபாகர் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

பெண் காவலருக்கு செக்ஸ் டார்ச்சர்... கூடுதல் எஸ்பி சார்லஸ் சஸ்பெண்ட்!

தமிழகத்தில் சமீப நாட்களாக பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்கள் அதிகரித்து வருகின்றன. மாணவிகள் வைக்கும் குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றும் தமிழகம முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் பெண் எஸ்பிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிற நிலையில், மேலும் எஸ்பி மீது பாலியல் புகார் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நீலகிரி மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு கூடுதல் எஸ்பியான சார்லஸ், பொள்ளாச்சி, பவானி உள்ளிட்ட இடங்களில் டிஎஸ்பியாகவும், கோவை மாநகர நுண்ணறிவுப் பிரிவில் இன்ஸ்பெக்டராகவும், ஈரோடு மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு கூடுதல் எஸ்பியாகவும் பணியாற்றியுள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவில் எஸ்பியாக சார்லஸ் பணியாற்றியபோது, அங்குள்ள பெண் காவலரிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட பெண் காவலர், உயரதிகாரிகளிடம் புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது.

பாலியல் புகார் மீது நடத்திய விசாரணையில், தவறு நடந்திருக்க முகாந்திரம் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, நீலகிரி மாவட்டக் கூடுதல் எஸ்பியாக இருக்கும் சார்லஸை சஸ்பெண்ட் செய்து, கூடுதல் முதன்மை செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டார். கூடுதல் எஸ்பி சார்லஸ் அரசு அனுமதியில்லாமல் வேறு எங்கும் செல்லக் கூடாது. நீலகிரி மாவட்டத்திலேயே தங்கியிருக்க வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.