அனுமதி இல்லாமல் கடத்தப்பட்ட 25 டன் தாது மணல் பறிமுதல் - 5 பேர் கைது

அனுமதி இல்லாமல் கடத்தப்பட்ட 25டன் தாது மணலை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அனுமதி இல்லாமல் கடத்தப்பட்ட 25 டன்  தாது மணல் பறிமுதல் - 5 பேர் கைது

நெல்லையில் அனுமதி இல்லாமல் கடத்தப்பட்ட 25 டன்  தாது மணலை பறிமுதல் செய்துள்ள போலீசார் டிரைவர் உட்பட 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குட்டம் பகுதியில் இருந்து கோவைக்கு தாது மணல் கடத்துவதாக நெல்லை மாநகர தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து பாளையங்கோட்டை அருகே உள்ள கீழநத்தம் நான்கு வழி சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த ஒரு டாரஸ் லாரியை பிடித்து சோதனை நடத்தினர். அப்போது அதில் 25 டன் தாது மணல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வாகனத்தை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் லாரியின் ஓட்டுனர் உட்பட 5 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.